மதுரையில் 47 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. மதுரை உத்தங்குடியில் மிகவும் பிரம்மாண்டமாக இந்த பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பொதுக்குழு கூட்டமாக கருதப்படும் நிலையில், முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலில் நெருங்கும் நிலையில் முக்கியத்துவம் பெற்ற தீர்மானங்கள் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையும் படிங்க: மதுரையில் சற்று நேரத்தில் திமுக பொதுக்குழு கூட்டம்! அரங்கில் குவியும் நிர்வாகிகள்...

மதுரை அரசு விருந்தினர் மாளிகையில் திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், டி ஆர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனிடையே திமுக பொதுக்குழு கூட்டத்தில் அரசியலை தாண்டி தமிழ்நாட்டின் வளர்ச்சியை தீர்மானிக்கும் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நீட் மட்டும் தான் உலகமா? சர்ச்சையில் சிக்கிய விஜய்... வலுக்கும் கண்டனங்கள்!!