ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுக நிர்வாகிகளுடன் தொடர்ந்து நடத்தி வரும் ஆலோசனைகள் இந்த “ஓரணியில் தமிழ்நாடு” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன.
இத்திட்டம் மக்களை ஒருங்கிணைத்து, அரசின் திட்டங்களையும் சேவைகளையும் திறம்பட வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக உறுப்பினர் சேர்க்கை மற்றும் மக்களின் கைபேசி எண்ணைப் பயன்படுத்தி OTP பெறும் முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த ஓடிபி பெறும் செயல்முறை சமீபத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஓடிபி பெறும் முறை தொடர்பாக எதிர்க்கட்சிகள், குறிப்பாக அதிமுக, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. மக்களின் கைபேசி எண்ணைப் பயன்படுத்தி ஓடிபி பெறுவது, தனிநபர் தரவுகளின் தனியுரிமையை மீறுவதாகவும், இது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: இபிஎஸ் செய்வது துரோகம்! தமிழகத்தை காட்டிக் கொடுக்கிறார்.. முத்தரசன் கடும் குற்றச்சாட்டு..!

நீதிமன்றம் otp பெறுவதற்கு இடைக்கால தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் திமுக மேல்முறையீடு செய்தது. திமுகவின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதற்கிடையில், முதல்வர் பெயரை திட்டங்கள் தொடங்கப்படுவது எதிர்த்த வழக்கில் திமுகவுக்கு பாதகமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. Otp விவகாரத்தில் இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிகழ்வு மற்றும் உச்சநீதிமன்றத்தில் திமுகவின் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்ட விவகாரம் மற்றும் முதல்வர் பெயரில் திட்டங்களை தொடங்க கூடாது என்ற உத்தரவு ஆகியவற்றை சுட்டிக்காட்டி அதிமுக விமர்சித்துள்ளது. திமுக அரசு நீதிமன்றத்தில் தொடர்ந்து குட்டு வாங்குவதாக கூறியுள்ளது.
இதையும் படிங்க: விஜயகாந்துக்கு இல்லாத எழுச்சியா விஜய்க்கு வர போகுது? பிசாசுக்கு மாற்று பேயா.. சீமான் கடும் விமர்சனம்!