நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். சமீப காலமாக விஜய் குறித்து சீமான் பல விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
தற்போது, திரை வெளிச்சத்தில் அவ்வப்போது சிலர் அரசியலுக்கு வந்து கொண்டு தான் இருப்பார்கள் என்றார். விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது ஏற்படாத எழுச்சியா தற்போது ஏற்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.
விஜய் என்ன மாறுபட்ட கொள்கை வைத்துள்ளார் என கேள்வி எழுப்பிய சீமான், அண்ணாமலையில் என இதை கூறுகிறார் என்றும் அண்ணா வழியில் தானே 60 ஆண்டுகளாக திமுக பயணிக்கிறது எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆக.21 தான் மாநாடு..! தமிழக வெற்றிக் கழகம் எடுத்த முக்கிய முடிவு.. காரணம் தெரியுமா?
அண்ணா வழியில் அல்லாமல் வேறு எந்த வழியில் திமுக, அதிமுக இருக்கிறது என்ற கேள்வியை முன்வைத்த சீமான், திமுக மற்றும் அதிமுகவை பேய், பிசாசு எனக் குறிப்பிட்டு பேசினார்.

பிசாசு வேண்டாம் என்று பேயை ஐந்து ஆண்டுகள் கட்டிக் கொள்வதாகவும், அதிமுகவை வைத்து திமுகவை எப்படி ஒழிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.
தீமையை வைத்து மற்றொரு தீமையை அழிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிய சீமான், மக்கள் விழித்தால் மட்டுமே மாற்றத்தை உருவாக்க முடியும் என்று கூறினார்.
100 நாள் வேலை திட்டத்தை கொடுத்து மக்களை சோம்பேறி ஆகிவிட்டதாக சீமான் விமர்சித்தார். 100 நாள் வேலை திட்டத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள் எவ்வளவு என்ற கேள்வியை முன்வைத்த அவர், சீரமைக்கப்பட்ட சாலைகள் எத்தனை என்றும் மக்களின் உழைப்பை ஆற்றலாக மாற்ற அரசு தவறிவிட்டது என்றும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: தவெக மாநாடு நடப்பதில் சிக்கல்! போலீசார் கொடுத்த முக்கிய அறிவுறுத்தல்..!