சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழா மேடையில் ஒரு சர்ச்சை சம்பவம் நிகழ்ந்து அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர் சுதா தீனதயாளன் பேசும்போது, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயைக் குறித்து தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். அவர் முதலமைச்சரை ‘நாய்’ என்று அழைத்து, அவரது வயதைச் சுட்டிக்காட்டி, உருவ ஒப்பீடு செய்து அவதூறான முறையில் பேசினார்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது முதலமைச்சர் உருவக் கேலி செய்ததாகக் கூறி அதற்குப் பதிலடியாக இப்படிப் பேசியதாக அந்தப் பேச்சு அமைந்தது. மேடையில் அமர்ந்திருந்த சென்னை மேயர் ஆர். பிரியா, இந்த அவதூறான பேச்சைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார்.

அதேநேரம் திமுக துணைப் பொதுச்செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அமைதியாக இருந்து, பின்னர் பேச்சாளரிடம் நாகரிகத்தைப் பேணுமாறு அறிவுறுத்தினார். முன்னாள் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவும் பேச்சாளரிடம் வேகமாகப் பேசுவதைத் தவிர்த்து, ஒருமையில் பேசாமல் மரியாதையுடன் பேச வேண்டும் என்று அறிவுரை கூறினார்.
இதையும் படிங்க: அடடா!! மேயர் பிரியாவா இது!! கேமரா பார்த்ததும் வெட்கத்தில் சிவந்த கன்னம்!! வைரலாகும் அந்த தருணம்!!
ஆனால் மேயரின் சிரிப்பு, வீடியோவில் தெளிவாகப் பதிவாகி, சமூக ஊடகங்களில் பரவியது. இந்தச் சம்பவம் தமிழக வெற்றிக் கழகத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. கட்சிப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா திமுகவைக் கடுமையாகச் சாடினார். அரசியல் மேடைகளைத் தனிப்பட்ட தாக்குதலுக்குப் பயன்படுத்துவதாகவும், மேயர் போன்ற பொறுப்பான பதவியில் இருப்பவர் இதைச் சிரித்து அனுபவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குற்றம்சாட்டினார். முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினின் அமைதியைக் குறிப்பிட்டு, இத்தகைய சம்பவங்களை அவர் ஊக்குவிக்கிறாரா என்றும் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில் அமைச்சர் மரிய வில்சன் கடுமையாக விமர்சித்து உள்ளார். முதலமைச்சர் குறித்து கேட்கவே முடியாத வார்த்தைகளால் கவுன்சிலர் பேசும்போது மேயர் சிரிக்கிறார் என்று குறிப்பிட்டார். இது எல்லாம் சேகர்பாபுவின் ட்ரெயினிங் என்று அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்திருக்கிறார். ஒரு அவதூறான பேச்சுக்கு விழுந்து விழுந்து சிரிக்கும் மேயருக்கு நிஜமாகவே அறிவு இருக்கிறதா? இல்லையா? எனத் தெரியவில்லை என்றும் அமைச்சர் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: அப்பாவுக்கும் மகனுக்கும் இதுதான் பொழப்பே..!! திமுகவை விட்டு விளாசிய அமைச்சர் மரிய வில்சன்..!!