பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்தும், திமுகவின் வளர்ச்சி பணிகள் குறித்தும் இந்த மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.மேலும், திமுக பொதுக்கூட்டத்தை மதுரையில் அடுத்த மாதம் நடத்துவது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆலோனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன.

திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசிகப்பட உள்ளன. திமுகவில் அமைப்பு ரீதியாக ஒன்றியங்களை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதிமுக - பாஜக கூட்டணி உறுதியான பிறகு நடைபெறும் முதல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்பதால் முக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.
இதையும் படிங்க: "சுயாட்சி நாயகர்" முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட பாராட்டு விழா..! தடபுடல் ஏற்பாடுகள்..!

அரசியல் ரீதியாக பல்வேறு விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளிடம் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இபிஎஸ்- ஐ கண்டதும் வணக்கம் வைத்த செங்கோட்டையன்! பரபர சூழலில் அதிமுக செயற்குழு கூட்டம் கூடியது!