முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பதினைந்தாயிரம் கல்வியாளர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மாநில சுயாட்சியை வென்றெடுக்க சட்டம் முன்னெடுப்புகளை கழகம் மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

அது மட்டுமல்லாது ஆளுநர் நிறுத்தி வைத்திருந்த பத்து மசோதாக்கள் நிறைவேற காரணமாக இருந்தார். எனவே மாநில உரிமைகளை மீட்டெடுத்த சுயாட்சி நாயகர் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு மே மூன்றாம் தேதி பாராட்டு விழா நடைபெறும் என அமைச்சர் கோவி செழியன் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்பு உங்களுக்கு கிடைத்த வெற்றியா? திமுகவை லெப்ட் ரைட் வாங்கிய நிர்மலா சீதாராமன்!!

அதன்படி நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்த பாராட்டு விழாவில் பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இதையும் படிங்க: வாகன ஓட்டிகளுக்கு எமனாகும் தெரு நாய்கள்.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய CM மு.க.ஸ்டாலின்!!