தமிழ்நாடு அரசு சார்பில் பொதுமக்களை அரசு அதிகாரிகள் நேரடியாக அணுகி மக்களின் குறைகளை கேட்டு அரிந்து குறைகளை தீர்க்கும் வகையில் அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் வந்தவாசி நகராட்சி நிர்வாகம் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நடை பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் கலந்து கொண்டு முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் 13 அரசு துறை கலந்து கொண்டனர். அதில் குடிநீர் வழங்கல் துறை
வருவாய்த்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, கூட்டுறவு, உணவு, மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறை, தொழிலாளர்கள் நலன், வீட்டு வசதி, சிறு குரு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த சார்ந்த அதிகாரிகள் அரங்குகள் அமைக்கப்பட்டு பொது மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று 45 நாட்களில் குறைகளை தீர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் தங்களின் குறைகளை மனுவாக எழுதி அந்த அந்த அரசு துறை சார்ந்த அதிகாரிகளிடம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் கலந்துகொண்டு மக்களிடையே நேரடியாக மனுக்களை பெற்று தீர்க்கும் வகையிலான திட்டங்களை குறித்து சிறப்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஒவ்வொரு துறை சார்பில் அமைக்கப்பட்ட அரங்குகளை பார்வையிட்டு பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது முகாமிற்கு வந்த பெண்ணிடம் குறையைக் கேட்டு அந்தப் பெண்மணியை அரங்குக்கு அழைத்துச் சென்று உடனடியாக குறையை தீர்க்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கூறினார்.மேலும் முகாமில் மருத்துவ துறை சார்பில் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த மருத்துவ பரிசோதனையில் மக்களோடு மக்களாக சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் அமர்ந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.
இதையும் படிங்க: காமெடி பண்ணாதீங்கப்பா... பாஜகவை திமுக எதிர்க்குதா? விளாசிய சீமான்..!
இந்த நிகழ்ச்சிகள் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் 2000க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: ஆதார் விவரங்களை கேட்கவில்லை.. குற்றச்சாட்டை நிராகரித்த திமுக..! நீதிமன்றத்தில் வாதம்..!