தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரப்பத்தியில் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்றது. இந்த மாநாட்டில் அலை கடலென தொண்டர்கள் கலந்து கொண்டனர். இலட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தனது உரையை நிகழ்த்தினார் விஜய். அப்போது, நமது ஒரே கொள்கை எதிரி பாஜக தான் என்றும் ஒரே அரசியல் எதிரி திமுக தான் எனவும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார். மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுப்பதாக கூறிய விஜய், பாசிச பாஜகவும் பாய்சன் திமுகவும் தான் எதிரி என கூறினார்.
பாஜகவின் கூட்டணி பொருந்தா கூட்டணியாக இருப்பதால் திமுக எதிர்ப்பதைப் போல் எதிர்த்து ஆதரிப்பதாக தெரிவித்தார். ஸ்டாலின் அங்கிள்., வாட் அங்கிள்., இட்ஸ் ராங் அங்கிள் என பேசினார். முதலமைச்சரை அங்கிள் என்று குறிப்பிட்டு பேசிய விஜய்க்கு பதிலடி கொடுப்பதாக நினைத்து திமுக எம்எல்ஏக்கள் பேசி இருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயை அநாகரிகமாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர். திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் விஜய்யை நடிகைகளுடன் ஒப்பிட்டு அநாகரீகமாக பேசியுள்ளார்.

அப்பா, அம்மா, மனைவியை பார்த்துக் கொள்ள முடியாதவர் மக்களை எப்படி பார்த்துக் கொள்வார் என்றும் பேசியுள்ளார். திரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகளின் பெயர்களை குறிப்பிட்டு பேசிய அவர், ஜெயலலிதா போல் ஸ்டாலின் இருந்திருந்தால் துணியை உருவி ஓட விட்டு இருப்பார் என்று பேசி உள்ளார்.
இதையும் படிங்க: தெரு முழுக்க மெண்டல்கள் தான் போல... ஆவேசமாக பேசி சர்ச்சையில் சிக்கிய திமுக MLA!
இதேபோல், ஈரோடு கிழக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் வி.சி சந்திரகுமார் விஜயை நாயுடன் ஒப்பிட்டு பேசினார். சூரியனைப் பார்த்து நாய் குலைத்தால் சூரியன் கோபப்படுவதில்லை என்றும் நாய் குலைக்கிறது என நினைத்து விட வேண்டும் என்றும் கூறினார். விஜயை நாய் என கூறுகிறீர்களா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, நீங்களே தவறாக புரிந்து கொள்கிறீர்கள் என்று மழுப்பலாக பதில் பேசினார்.
இதையும் படிங்க: கேள்வியே கேட்கக்கூடாதுல? ஆள் சேர்க்கை ஒன்னு தான் கேடு! திமுக எம்.எல்.ஏவுக்கு நயினார் கடும் கண்டனம்..!