ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தின் மூலம் திமுக ஆள் சேர்க்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. திமுகவினர் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து திமுக அரசியல் நடந்த சாதனைகள் உள்ளிட்டவற்றை கூறி உறுப்பினர் சேர்க்கை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக எம்எல்ஏ உதயசூரியன் உறுப்பினர் சேர்க்கைக்காக சென்று இடத்தில் சாலை வசதி செய்து தரவில்லை உறுப்பினர் சேர்க்கைக்கு மட்டும் வருகிறீர்கள் எனக் கேட்ட இளைஞர்களை அவர் அடக்குவது தொடர்பான வீடியோ ஒன்றை நயினார் நாகேந்திரன் பகிர்ந்து உள்ளார்.
திமுக எம்எல்ஏ உதயசூரியனுக்கு தமிழக பாஜக தலைவர் நயனார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். சாலை வசதி செய்து தராமல் உறுப்பினர் சேர்க்கைக்கு ஏன் வருகிறீர்கள் என கேட்ட இளைஞர்களை உதயசூரியன் எம் எல் ஏ மிரட்டி இருப்பது சரியல்ல எனக் கூறினார். இளைஞர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டும் தொனியில் பேசுகிறார் என நய்யனார் நாகேந்திரன் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: இதுக்கு தான் உங்களுக்கு ஓட்டு போட்டோமா? - காரை முற்றுகையிட்ட பொதுமக்கள் - எம்.எல்.ஏ. செய்த காரியம்...!

திமுகவினர் போகும் இடங்களில் எல்லாம் மக்கள் தங்கள் கேள்விகளால் துளைத்து எடுப்பதாக கூறிய நயினார் நாகேந்திரன், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தராத திமுகவுக்கு ஆள் சேர்க்கை ஒரு கேடா என கேள்வி எழுப்பினார்
மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு என்று திமுகவினருக்கு நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார். மேலும் திமுக கால் வைக்கும் இடங்களிலும் கையில் கிடைக்கும் துறைகளிலும் ஊழல் செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் காலத்தில் ஒன்றும் தெரியாதது போல் சென்று நலம் விசாரித்தால் மட்டும் மக்கள் ஏற்பார்களா? நிச்சயம் ஏற்கமாட்டார்கள் என்று தெரிவித்துள்ள அவர், வாக்களித்த மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்லி பழக்கமில்லாத திமுகவைச் சேர்ந்த உடன்பிறப்புகள் அந்த இளைஞர்களை அடக்க முற்படுவதாக தெரிவித்தார்.
இதுதான் கட்டப்பஞ்சாயத்து மாடல் அரசின் உண்மை முகம் என்றும் திமுகவின் வெற்று விளம்பரங்களை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து விடுவார்கள் என மனக்கோட்டை கட்டி வந்த திமுக தலைவர்களை, கேள்வி கேட்டு மக்கள் வாட்டி எடுப்பதாகவும் தெரிவித்தார்.
கோடிக்கோடியாக மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த திமுக அரசின் அழிவிற்கான ஆரம்பம் இது என்றும் நயினார் நாகேந்திரன் கடுமையாக சாடினார்.
இதையும் படிங்க: அவர போல வருமா? அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர்! கலைஞருக்கு புகழ் மகுடம் சூட்டி அன்பில் மகேஷ்