சேலம் மாவட்டம் கருமந்துறை கிராங்காடு கிராமத்தில் திமுக கிளை செயலாளர் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
சேலம் ஆத்தூர் அருகே உள்ள கருமுந்துறை மலை கிராமமான கிராங்காடு பகுதியில் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் என்பவர் நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை சம்பவத்தில் இரண்டு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் தற்போது பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படையையும் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் கருமந்தரை அருகே உள்ள கிராங்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன், திமுக கிளை செயலாளராக பணியாற்றி வந்தார். மேலும் முன்னாள் வனக்குழு தலைவராகவும் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்றைய தினம் அவருடைய மனைவியுடன் விவசாய நிலத்திற்கு சென்றபோது நாட்டு துப்பாக்கியால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் மலை கிராமம் என்பதால் இந்த உயிரிழந்த சம்பவம் காலத்தாமதமாகவே காவல் துறைகளுக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக அவர்கள் ராஜேந்திரன் உடலை கைப்பற்றிய கரியகோவில் காவல் துறையினர் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிள்ளனர்.
மேலும் ராஜேந்திரன் கொலையில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், கிராங்காடு பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மற்றும் அவருடைய அண்ணன் பழனிசாமி ஆகிய இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏனென்றால் ராஜேந்திரன் வன அலுவலுக்கு நில சங்க தலைவராக இருக்கும் பொழுது, இரு தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. ராஜேந்திரன் தொடர்ந்து வழக்கு ஒன்றில் இந்த இரண்டு பேரும் சிறைக்கு சென்று சமீபத்தில் விடுதலையானது தெரியவந்துள்ளது. ஒருவேளை இதனால் ஏற்பட்ட முன்பகை காரணமாக இருவரும் ராஜேந்திரனை சுட்டுக் கொன்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக கிளைச் செயலாளர் நிலத்தகராறு காரணமாக நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #Breaking சென்னையில் காலையிலேயே சீறிப்பாய்ந்த போலீஸ் தோட்டா... பிரபல ரவுடி சுட்டுப்பிடிப்பு...!