மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு எதிராகவும் நூறு நாள் வேலையை ஒழிக்கும் சட்டம், விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை புறக்கணித்து இருப்பதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாட்டை புறக்கணித்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து வளர்ச்சியைத் தடுத்து வரும் மத்திய பாஜக அரசையும், அதற்கு ஒத்து ஊதும் அடிமை அதிமுக வையும் கண்டித்து தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்களில் வரும் 12 ஆம் தேதி காலை 10.30 மணியளவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாஜக அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ரூ.3458 கோடி, நூறு நாள் வேலை திட்ட நிதி ரூ.2000 கோடி, குடிநீர் இணைப்பு திட்ட நிதி ரூ3,112 கோடி உள்ளிட்ட எந்த நிதியையும் விடுவிக்காமலும் வளர்ச்சி திட்டத்திற்கு ஒரு பைசா கூட ஒதுக்காமலும், தமிழ்நாட்டு மக்களை பாஜக அரசு புறக்கணித்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாட்டிற்கான நிதியும் இல்லை, வளர்ச்சித் திட்டமும் இல்லை என மத்திய அரசு கைவிரித்த போதும் அவர்களது காலில் விழுந்து ஆதரித்துள்ளது அடிமை அதிமுக என குற்றம்சாட்டியுள்ளது.

நிதி மறுப்பு ஒருபுறம் என்றால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, நூறு நாள் வேலையையே இனி இல்லாமல் செய்து கிராம மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டத்தை திரும்பப்பெறவோ, அதற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவோ செய்யாமல் ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்துள்ளது என்றும் அமெரிக்காவின் விவசாயம் சார்ந்த பொருட்களை இங்கே இறக்குமதி செய்து விற்க ஒப்புக்கொண்டு நமது விவசாயிகளின் வாழ்வையே கேள்விக்குறியாக்கி உள்ளது என மத்திய பாஜக அரசு மேல் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை திமுக முன்வைத்துள்ளது.
இதையும் படிங்க: ஆட்சி மட்டுமில்ல... திமுக கட்சியே CLOSE..! அமைச்சர்களை கேள்விகளால் துளைக்கும் மக்கள்... அதிமுக விமர்சனம்..!
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியினருடன் இணைந்து மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள் நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக நிர்வாகினா தப்பு செய்ய லைசன்சா?... அறிவாலயா அராஜகம்..! போட்டு தாக்கிய தவெக அருண் ராஜ்..!