இளம் பெண்களுக்கு உதவுவது போல் பழகி, திமுக நிர்வாகி தெய்வ சாயல் என்பவர் பல பெண்களுக்கு உதவுவது போல் நடித்து ஏமாற்றி இருப்பதாகவும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும் டிஜிபி அலுவலகத்தில் இளம் பெண் ஒருவர் புகார் அளித்தார்.
தெய்வ சாயலை காவல்துறையினர் தப்பிக்க வைக்க முயற்சி செய்வதாகவும், திமுக ஒன்றிய இளைஞரணி நிர்வாகியாக இருக்கும் இவர் மீது புகார் அளித்தாலும் காவல்துறையினர் ஏற்க மறுப்பதாகவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அந்த பெண் குற்றம் சாட்டினார். 20 பெண்களை அவர் ஏமாற்றி இருப்பதாகவும் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த நிலையில் தன்னை குற்றவாளி போல் நடத்துவதாக அந்த இளம் பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அழுது கொண்டே அந்தப் பெண் பேசும் வீடியோ வெளியாகி பெருமகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. முன்பு இருந்த தைரியம் தற்போது தனக்கு இல்லை என்றும் குற்றம் செய்த தெய்வசாயல் சந்தோஷமாக வெளியில் சுற்றி தெரிவதாகவும், பாதிக்கப்பட்ட தன்னால் வெளியில் செல்ல முடியவில்லை, தன் தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் மருத்துவமனைக்கு கூட செல்ல முடியாத சூழல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆளுங்கட்சியோ எதிர்கட்சியோ... எங்களுக்கு இது தான் முக்கியம்! அடித்து பேசிய முதல்வர்...

தான் மறைமுகமாக பல பிரச்சனைகளை சந்தித்து வருவதாகவும், தற்கொலை செய்து கொள்வேனோ என்ற பயம் வந்துவிட்டதாகவும் அந்த பெண் கண்ணீர் மல்க பேசி உள்ளார்.
இதையும் படிங்க: கையில் உதயநிதி, அன்பில் மகேஷ் TATTOO... ஏழைப் பெண்கள் தான் டார்கெட்! திமுக நிர்வாகி மீது இளம்பெண் பகிர் குற்றச்சாட்டு..!