நம்ம தான் ஜெயிக்கிறோம்… நம்ம மட்டும் தான் ஜெயிக்கிறோம்.. என கரூர் சட்டமன்றத் தேர்தல் திமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் உறுதிப்படுத்த தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளராக தியாகராஜன் அறிவிக்கப்பட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், இன்று கரூர் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள வஞ்சியம்மன் கோவில், பிள்ளையார் கோவில் முன்பு, மக்கள் பாதை தெற்கு தெரு, முனுசாமி சந்து மேட்டு தெரு, மாரியம்மன் கோவில் முன்புறம், தேர் வீதி ஜவகர் பஜார், பெருமாள் கோவில் பழைய கடைவீதி உள்ளிட்ட 34 இடங்களில் காலை 7 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை பிரச்சாரம் மேற்கொண்டார். அனைத்து இடங்களிலும் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

பொதுமக்கள் சால்வை அணிவித்தும், ஆரத்தி எடுத்தும், பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக வேட்பாளரை ஆதரித்து செந்தில் பாலாஜி சகோதரரும் தேர்தல் பொறுப்பாளர் அசோக் குமார் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். செந்தில் பாலாஜி கோவை சென்று விட்டார்., அதனால் எனக்கு இந்த தடவை ஓட்டு போடுங்க என்று சொல்கிறார்கள்
இதையும் படிங்க: தந்தைக்காக விட்டுக் கொடுத்த மகன்...! தேர்தலில் போட்டியில்லை... வினோத் காந்தி அதிரடி அறிவிப்பு..!!
செந்தில் பாலாஜி எங்கேயும் செல்லவில்லை, முன்பு கரூரில் வெற்றி பெற்று கோவையை பார்த்தார் இப்போது கோவையில் வெற்றி பெற்று கரூரையும் சேர்த்து பார்க்கப் போகிறார்., காலை கோவை, மாலை கரூர் என்று உங்களிடம் தெரிவித்துக் கொண்டு ஐந்து ஆண்டுகளில் 5,500 கோடிகளைப் பெற்றுத்தந்து தமிழ்நாட்டிலேயே ஒரு மாவட்டத்திற்கு அதிக நிதியை பெற்றுத் தந்தவர் செந்தில் பாலாஜி இன்று கூறினார். தியாகராஜனை வேட்பாளராக நிறுத்தி உள்ளார். அவருக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார்.
இதையும் படிங்க: துரை சந்திரசேகரை அமைச்சராக்க பரிந்துரைப்பேன்..! ஆனால்... பரப்புரையில் டிமாண்ட் வைத்த உதயநிதி..!!