திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை கடுமையாக சீர்கேடு அடைந்துள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். பட்டப்பகலில் வெட்டவெளியில் தொடரும் கொலைகள் மற்றும் குற்றச் செயல்கள் மாநில மக்களின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சேலத்தில் பகல் நேரத்தில் பொது இடத்திலேயே கொலை நடந்திருப்பதை எடுத்துக்காட்டிய அவர், இத்தகைய சம்பவங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
மதுரையில் காணாமல் போன சிறுவன் பின்னர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதும், செஞ்சியில் மாயமான சிறுமியின் விவகாரம் இன்னும் மர்மமாகவே தொடர்வதும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.வீடியோ கேம்கள் மற்றும் ஹாரர் திரைப்படங்களை மிஞ்சும் அளவுக்குத் தமிழ்நாட்டில் குற்றங்கள் பெருகி வருவதாக ஸ்டாலின் கவலை தெரிவித்தார். த.வெ.க. ஆட்சியில் குற்றவாளிகளுக்கு Free Run கிடைத்தது போல அச்சமின்றிக் குற்றச் செயல்களைப் புரிகிறார்கள் என அவர் குற்றம்சாட்டினார்.

தினமும் கொலைகளை எண்ணும் கொடிய நிலையில் தமிழ்நாடு இருக்கிறது என்று கூறிய அவர், இது மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு தீவிரமடைந்துள்ளதாக எச்சரித்தார். சட்டம் ஒழுங்குக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல முதலமைச்சர் ஏன் மவுனமாக இருக்கிறார் என கேள்வி எழுப்பிய அவர், சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை என்றும் வினவினார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ரவுடிகள் ராஜ்ஜியம்!! சட்டம் ஒழுங்கு என்பது Sample-க்கு கூட இல்லை! உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
இந்த சீர்கேட்டைக் கண்டித்து வரும் சனிக்கிழமை அக்டோபர் 31 அன்று தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் இந்த போராட்டம் மூலம் அரசின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் என்றும், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் உடனடி நடவடிக்கைகளை எடுக்கக் கோரும் என்றும் அவர் தெரிவித்தார். சேலம் கொலை சம்பவம் போன்ற பகலில் நடக்கும் குற்றங்கள் பொதுமக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்துவதாகவும், மதுரை மற்றும் செஞ்சி சம்பவங்கள் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: #BREAKING: ரூ. 100 கோடி லஞ்சப் புகார்..! அன்பில் மகேஷ் முன்ஜாமின் தள்ளுபடி..! இடியை இறக்கிய ஹைகோர்ட்..!!