முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து ஆபாசமாக பேசிய விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். தஞ்சாவூரில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் அரசியல் பரபரப்பை உருவாக்கியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கண்டனம் வலுத்து வந்தது.
இதைத்தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக போலீசார் அவரது இல்லத்திற்கு சென்றுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கைக்கு எதிராக அவசர முறையீடு செய்யப்பட்டிருக்கிறது.

அவசர வழக்காக விசாரிக்கக் கூடிய முறையீடு ஏற்கப்பட்டது. உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய தஞ்சாவூர் போலீசார் முனைப்பு காட்டி வரும் நிலையில் அதனை தடுக்கும் விதமாக சட்டமன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் கைது செய்ய முயற்சிப்பதாக உயர்நீதிமன்றத்தில் செய்யப்பட்டிருக்கிறது. பிற்பகல் 12 மணிக்கு வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில் அதுவரை அவரை கைது செய்ய வேண்டாம் என்று நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.

இதையும் படிங்க: “ஆபாச பேச்சு”... ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு..! உதயநிதி மீது கைது நடவடிக்கை..!!
இந்த நிலையில், முதலமைச்சர் மற்றும் நடிகை குறித்து ஆபாசமாக பேசிய விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். உதயநிதி ஸ்டாலினை கைது செய்து தஞ்சை மாவட்ட காவல்துறையினர் அழைத்துச் செல்கின்றனர். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: காவிரி உரிமையை காத்துல பறக்கவிடாதீங்க..! போராட்டம் பெருகும்.. ஸ்டாலின் எச்சரிக்கை..!!