திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய அங்கமாக விளங்கும் இளைஞரணி, 1980ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி மதுரை ஜான்சிராணி பூங்காவில் அன்றைய தலைவர் கருணாநிதியால் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. இந்திய அரசியலில் ஒரு மாநிலக் கட்சியின் சார்பில் உருவாக்கப்பட்ட முதல் இளைஞர் அமைப்பு என்ற பெருமையைப் பெற்ற இந்த அணி, இன்று 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலான பயணத்தில், திமுகவின் கொள்கைகளை இளைஞர்கள் மத்தியில் பரப்புவதிலும், அவர்களை அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபடுத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.
1980களின் தொடக்கத்தில் திமுக கடுமையான எதிர்க்கட்சி நிலையில் இருந்த காலகட்டத்தில் இளைஞரணியின் தொடக்கம் கட்சியினருக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. மு.க. ஸ்டாலின் போன்ற இளம் தலைவர்களின் ஈடுபாடு இந்த அணிக்கு வலு சேர்த்தது. 1982ஆம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற இரண்டாம் ஆண்டு விழாவில் ஸ்டாலின் உள்ளிட்டோர் பொறுப்புகளை ஏற்றனர். அன்றிலிருந்து இளைஞரணி திமுகவின் அடித்தளத்தை வலுப்படுத்தும் சக்தியாக மாறியது. மொழி உரிமை, இன உணர்வு, சமூக நீதி, மாநில சுயாட்சி போன்ற திராவிட இயக்கக் கொள்கைகளை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் பணியை இடைவிடாமல் மேற்கொண்டு வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராகப் பொறுப்பேற்ற பிறகு இந்த அணியின் செயல்பாடுகள் புதிய உயிர் பெற்றன. உறுப்பினர் சேர்க்கை முகாம்கள், திராவிட மாடல் பாசறை கூட்டங்கள், சமூகப் பணிகள், இளைஞர்கள் மத்தியில் தொழில்நுட்பப் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் இளைஞர்களை ஒன்றிணைத்தார். லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த அணியில் இணைந்து, கட்சியின் எதிர்காலத்தை வலுப்படுத்தும் சக்தியாக மாறினர். திமுக இளைஞரணி 47 வது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நிலையில் கழகத் தலைவர் ஸ்டாலினால் வளர்த்தெடுக்கப்பட்ட இளைஞரணி என முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எலும்பை உடைப்பேன்!! முதல்வர் விஜய்க்கு மிரட்டல்?! திமுக எம்.எல்.ஏ மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
இளைஞரணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலில் இளைஞரணி தம்பிகள் புத்துணர்ச்சி பெறுகிறார்கள் என்றும் அடுத்த தலைமுறை திராவிட அரசியலின் OG-ஆக தம்பிகள் திகழ்வதற்கான அடித்தளம் அமைக்கப்படுகிறது எனவும் தெரிவித்தார். அத்தளத்தில் தடம் பிறழாமல் நடப்போம் என கூறிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி, என்னை தாலாட்டியும் கண்டித்தும் செதுக்கியது இளைஞரணிதான் என்பதிலும் பேருவகை அடைகிறோம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ரொம்ப ஸ்ட்ரிக்ட்..! போலீஸ் நடவடிக்கை... கொந்தளிக்கும் மார்க்கண்டேயன் ஆதரவாளர்கள்..!