நீர்ச்சத்து இழப்பு ஏற்படும்போது வழங்கப்படும் ஓஆர்எஸ்எல் கரைச்சலை வேறு பெயர்களில் விற்பனை செய்யும் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்ததுறை தெரிவித்துள்ளது. 
தமிழகத்தில் உள்ள மருந்தகம் மற்றும் கடைகளில் ஓஆர்எஸ்எல் என லேபிலை பயன்படுத்தி விற்பனை செய்தால் தமிழக உணவு பாதுகாப்பு துறை மற்றும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு இயக்கம் உடனடியாக அதை பறிமுதல் செய்யவும், சம்பந்தப்பட்ட கடை அல்லது மருத்தகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்ததுறை உத்தரவு அளித்திருக்கிறது. உலக பொது சுகாதார அமைப்பான WHO மற்றும் தேசிய காசாநோய் ஆராய்ச்சி நிறுவனம் என அச்சிடப்பட்ட ஓஆர்எஸ்எல்-கள் மட்டுமே தமிழகத்தில் விற்பனை செய்ய வேண்டும் என சுகாதாரத்ததுறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இதை தவிர மற்ற பெயர்களில் ஓஆர்எஸ்எல் பெயர் அச்சிடப்பட்டு மருந்தகளிலும் கடைகளிலும் விற்கப்பட்டால் அதை தடை செய்ய வேண்டும் எனவும், அதை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஓரல் ரீஹைட்ரேஷன் சொல்யூஷன் என்பது வயிற்று போக்கு, வாந்தி மற்றும் பிற காரணங்களால் உடலில் இருந்து அதிக அளவு திரவம் வெளியேறி நீர்ச்சத்து இழப்பு ஏற்படும்போது வழங்கப்படும் முதல் சிகிச்சையாகும். மேலும் ஓஆர்எஸ்எல் காணப்படும் தண்ணீர், உப்பு, எலக்ட்ரோல்கள் மற்றும் குளுக்கோஸ் ஆகியவற்றின் கலவை உடலில் இழந்த திரவங்கள் மற்றும் மினரல்கள் உடனடியாக மீட்டு எடுப்பதற்கு உதவுகிறது. இப்படிப்பட்ட ORS பல்வேறு வகைகள் உருவெடுத்து விற்பனைக்கு வந்துள்ளது. பல மருந்தகம் மற்றும் கடைகளில் ORSL விற்பனை செய்யப்படுகிறது இதில் சோடியம் குளுக்கோஸ் அளவு  அதிகமாக இருப்பதாக கூறப்படுவதன் காரணமாக, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற காரணங்களால் பாதிக்கப்படும்போது அந்த பிரச்சனைகள் தீவிரமடையும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 
இதையும் படிங்க: தங்கமகள் கார்த்திகாவுக்கு குவியும் பாராட்டு..!! நேரிலேயே போன மாரி செல்வராஜ்..!! என்ன செய்தார் தெரியுமா..??
இந்நிலையில் தமிழகத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு மருத்துவத்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அந்த ஆலோசனையில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு ஒரு உத்தரவானது பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த உத்தரவில் அனைத்து மருந்து மற்றும் கடைகளுக்கு சென்று ஓஆர்எஸ்எல் என்ற கரைச்சலை விற்பனை செய்தால் உடனடியாக அதை தடை செய்து,  பறிமுதல் செய்ய வேண்டும் எனவும், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர்கள் அனைத்து மருந்தகத்திற்கும், கடைகளுக்கும் சென்று அங்கு விற்பனை செய்யப்படக்கூடிய ORSL கரைச்சலை ஆய்வு மேற்கொண்டு அந்த கரைச்சலை உடனடியாக பறிமுதல் செய்து வருகின்ற்னார் 
உலக சுகாதார மையம் மற்றும் தேசிய காசா நோய் ஆராய்ச்சி நிறுவனம் என அச்சிடப்பட்ட ஓஆர்எஸ்கள் மட்டுமே தமிழகத்தில் விற்பனை செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்த துருக்கி! ஆபரேசன் சிந்தூர் காயத்தை திருப்பி கொடுத்த இந்தியா!