சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சுமார் 60 மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.இந்த சோதனையின்போது ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழ்கத்தில் மீண்டும் களமிறங்கியுள்ளது அமலாக்கத்துறை. சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலையிலேயே அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னையில ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதலே அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமான சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சிஆர்பிஎஃப் வீரர்களின் உதவியுடன் இந்த சோதனையானது நிகழ்த்தப்பட்டு வருகிறது. என்சி டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனத்திலும், அந்த நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனையானது நிகழ்த்தப்பட்டு வருகிறது. அந்நிறுவனத்தின் உரிமையாளரான ஏ.கே.நாதனுக்கு தொடர்புடைய இடங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மிரட்டல், உருட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது! பாஜகவை நேரடியாக தாக்கிய வைகோ..!

அசோக் நகரில் இருக்கக்கூடிய அந்த என்சிஸ் டெக்னாலஜி என்ற நிறுவனத்திற்கு தொடர்புடைய இடங்களிலும் சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள ஏ.கே. நாதன் என்பவரது வீட்டிலும், அவருக்கு தொடர்புடைய லேப் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இது மெடிக்கல் சம்பந்தப்பட்ட உபகரணங்கள் மற்றும் பொருட்களை விற்கக்கூடிய இந்த நிறுவனம் என்பதால் இந்த நிறுவனத்தின் மூலமாக சட்ட விரோத பணப்பரிமாற்றம் எது நிகழ்ந்திருக்கிறதா? என்ற கோணங்கள் அமலாக்கத்ததுறை அதிகாரிகள் இன்று காலை முதலே கோட்டூர்புரம், விருகம்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் கோயம்பேடு ஜெயநகர் 8வது தெருவில் உள்ள எக்கோ கேர் இன்ஜினியர் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் எம்டி குணசேகரன் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இவர்கள் யார் யாருக்கெல்லாம் இது போன்ற மெடிக்கல் உபகரணங்கள் சப்ளை அப்ளை செய்துள்ளனரோ, அவர்களுடைய நிறுவனங்களிலும் சோதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது.

கே.கே. நகர் டாக்டர் ரங்கசாமி சாலை பகுதியில் அமைந்திருக்கக்கூடிய மருத்துவர் வரதராஜன் என்பரது வீட்டிலும், விருகம்பாக்கம் காவேரி தெருவில் அமைந்திருக்கக்கூடிய பாண்டியன் என்பது வீட்டிலும் 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருகிறது. பாண்டியன் என்பவர் மாசு கட்டுப்பாட்டு வாரிய கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவர். குறிப்பாக இவர் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் வழக்கு பதிவு உள்ளது. இவர் அதிமுக ஆட்சி காலத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய துறையில் கண்காணிப்பாளராக இருந்தபோது பன்மடங்கு சொத்து சேர்த்ததாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி இவரது வீடு மற்றும் இவருக்கு நெருக்கமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

குறிப்பாக லஞ்ச புகாரில் சிக்கிய பாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பாட்டார். அது மட்டுமல்லாமல் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி இவரது வீட்டில் லஞ்ச் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு 18 மணி நேரம் சோதனையில் நடத்தி சுமார் 1.3 38 கோடி அதாவது ஒரு கோடியே 37 லட்சம் பணம், மூன்று கிலோ தங்க கட்டிகள், 3 கிலோ வெள்ளி பொருட்கள், லட்ச ரூபாய் மதிப்புள்ள வைரம், 7 கோடி ரூபாய் மதிப்புள்ள 18 சொத்து ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தற்போது இவரது வீட்டிலேயே தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பில்ரோத் மருத்துவமனை உரிமையாளர்கள் வீட்டில் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சட்ட விரோத பணப்பாரிமாற்றம் தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தான் இந்த சோதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது. முழுமையான யாருக்கு தொடர்பு என்ற தகவலை இதுவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை தூசி தட்டி தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நிகழ்த்தி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய முடியாது.. வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்..!