கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, பகல்காமில் தீவிரவாதிகளால் பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வேதனை அளிப்பதாகவும், போர் என்றால் எளிதான விஷயம் அல்ல என்றும் போர் மூண்டால் இருதரப்பிலும் அப்பாவி மக்கள் பெருமளவில் உயிரிழக்க நேரிடும் என்றும் கூறினார். போர் ஏற்பட்டால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என கூறிய அவர் பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும் சர்வதேச நாடுகளும் இதற்கு அழுத்தம் தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய வைகோ, நீட் தேர்வு விலக்கு என்ற வாக்குறுதியை நிறைவேற்ற திமுக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் திமுகவின் நான்கு ஆண்டுகால ஆட்சியில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். சொல்லாத வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றி உள்ளது. திராவிட மாடல் ஆட்சி திருப்திகரமாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: கமலுக்கு எம்.பி. பதவி.. வைகோவுக்கு உண்டா.? கிடைக்காவிட்டால் மதிமுக என்ன செய்யும்.. வைகோ அதிரடி!

வருமான வரித்துறை சோதனைகளுக்கு தி.மு.க அஞ்சுவதாகக் கூறுவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், பயம் என்பது தி.மு.க வின் அகராதியில் இல்லை என்றும் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை போன்ற அமைப்புகள் மத்திய அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன எனவும் கூறினார். இதனால், அந்த அமைப்புகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துவிட்டது என்றும் தி.மு.கவினர் இதைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மல்லை சத்யா அரசியலுக்கு துணையா இருப்பேன்..! கோபத்தை விட்டு கிரீன் சிக்னல் காட்டிய துரை வைகோ..!