xவிவசாயிகள் கேட்காத கோரிக்கைகள் எங்களிடம் இருக்கின்றது, அதையும் செய்வோம் எனவும், இப்பொது சொன்னால் வெளியில் தெரிந்து விடும் எனவும் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடத்த கலந்துரையாடல் கூட்டத்தில் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" பயணம் இன்று பிற்பகல் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி துவங்குகின்றார். இதற்காக மேட்டுப்பாளையம் வந்த அவர் வனபத்திரகாளியம்மன் கோவிலில் சாமி குப்பிட்டார். பின்னர் தேக்கம்பட்டி பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் செங்கல் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.

பின்னர் விவசாயிகள் , நெசவாளர்கள், செங்கல் உற்பத்தியாளர்கள் மத்தியில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி , மத்திய அரசுக்கு அனுப்பிய அவினாசி அத்திகடவு திட்டம் மத்திய அரசால் திருப்பி அனுப்பபட்டது எனவும், இதற்கு பின்பு மாற்று திட்டமாக அவினாசி அத்திகடவு திட்டம் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தபட்டது எனவும் தெரிவித்தார்.விவசாயிகள் மனம் குளிரும் அளவிற்கு பாசனம் பெறும் அளவில் அவினாசி அத்திகடவு திட்டம் ஆட்சிக்கு வந்தவுடன் விரிவாக செயல்படுத்தபடும் என தெரிவித்த அவர், ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்ட அந்த திட்டம் இந்த ஆட்சியில் பைவிடப்பட்டது என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வார்ரே வா... இபிஎஸ் சுற்றுப்பயணம் கோலாகல தொடக்கம்! ஓடோடி வந்து வாழ்த்திய நயினார் நாகேந்திரன்!
விவசாயிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும் போது விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றபடும் எனவும் அவர் தெரிவித்தார். விவசாயிகளுக்கு ஏரி, குளங்கள் அதிமுக ஆட்சியில் தூர்வாரப்பட்டது, ஒரு சொட்டு நீர் கூட வீணாகமல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது,
உள்ளாட்சி துறை மூலமும் தூர்வாரப்பட்டது என தெரிவித்த அவர், இந்த ஆட்சியில் தூர்வாரும் பணியை கிடப்பில் போட்டு விட்டனர் எனவும் தெரிவித்தார்.

அவினாசி அத்திகடவு பழைய திட்டத்தில் பவானி அணை நிரம்பிய பின்புதான் தண்ணீர் எடுக்க முடியும் என தெரிவித்த அவர் அதை செயல்படுத்த 15 வருடம் ஆகும், தொட்டிபாலம், டனல் போன்றவை அமைக்க வேண்டும், வனத துறை அனுமதி வேண்டும், மத திய அரசு அனுமதி வேண்டும் இப்படி பல பிரச்சினைகள் இருந்தது என தெரிவித்த அவர், ஆனால் எப்படியாவது விவசாயிகளுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதற்காக அதிமுக ஆட்சியில் சிறப்பு குழு அமைத்து அவினாசி அத்திகடவு திட்டம் மாற்று திட்டமாக செயல்படுத்தபட்டது என தெரிவித்தார்.
நான் விவசாயி, இன்றைக்கும் விவசாயம் செய்து கொண்டு இருக்கின்றேன், அதனால தான் என்னை யாரும் எதுவும் செய்ய முடியவில்லை என தெரிவித்த அவர், இந்தியாவிலயே சொட்டு நீர் பாசனத்திற்கு அதிக நிதியை அதிமுக ஆட்சியில் பெற்றுக்கொடுத்தோம் எனவும் தெரிவித்தார். கால்நடை துறைக்காக அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட ஆராய்ச்சி மையம் பூட்டிகிடக்கின்றது , இது போன்ற பல திட்டங்கள் முடங்கி இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.
3 முனை மின்சாரம் விவசாயிகளுக்கு அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்டது, இப்போது அதற்கும் கட்டுப்பாடு வந்து விட்டது எனவும், வண்டல் மண் எடுப்பதற்கும் இந்த ஆட்சியில் இப்போது விடுவதில்லை எனவும் தெரிவித்தார். எதிர்காலத்தில் விவசாயிகளின் எதிர்பார்பிற்கு மேல் விவசாயத்து செய்யப்படும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

வனத்துறைக்கு அருகில் இருக்கும் பயிர்கள் வனவிலங்குளால் பாதிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கைகள் அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்டது எனவும், நிறைய திட்டங்கள் எங்களிடம் இருக்கின்றது எனவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். செங்கல் சூளை தொடர்பான கோரிக்கைகள் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார். அரசியல் பேசக்கூடாது என நினைத்தேன், ஆனால் திமுக ஆட்சியில்
4 முறை கட்டண உயர்வால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்த அவர்,
அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோரிக்கைகள் பரசீலித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கேரளாவில் இருந்து தண்ணீர் உரிமையை பெறுவது உள்ளிட்டவை குறித்தும் பேசப்படும் எனவும், சுத்தமான நீர் கிடைக்கப்பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
நதிகளை பாதுகாக்க 11 ஆயிரம் கோடி நிதி கிடைத்து உள்ளது, இது அதிமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைதான் காரணம் எனவும் தெரிவித்தார். விவசாயிகள் கேட்காத கோரிக்கைகள் எங்களிடம் இருக்கின்றது, அதையும் செய்வொம், இப்பொது சொன்னால் வெளியில் தெரிந்து விடும் எனவும் அதுமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இதையும் படிங்க: அவர் எங்கள புகழ்ந்தா பேசுவாரு? சும்மா குறை சொல்லிட்டே இருப்பாரு.. இபிஎஸ்-ஐ வெளுத்த துரைமுருகன்..!