நெல்லையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட போதனைகளுக்குச் சென்ற காவல் உதவி ஆய்வாளரை அறிவாளால் வட்டம் முயன்ற 17 வயது சிறுவன் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டம் பாப்பாகுடியில் ரஸ்தா என்ற இடத்தில் 17 வயது சிறுவனுக்கும் அதே பகுதியை சேர்ந்த மாற்று சமூகத்தைச் சேர்ந்த நபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து சென்ற பாப்பாக்குடி காவல் உதவி ஆய்வாளர் முருகன் மோதலை தடுக்கும் முயற்சித்ததாக தெரிகிறது.
அப்போது ஆத்திரத்தில் இருந்த அந்த 17 வயது சிறுவன் உதவி ஆய்வாளரை வெட்ட முயன்றதாகவும், இதனை தடுக்க உதவி ஆய்வாளர் வீட்டிலிருந்த கழிவறைக்கு ஓடி சென்று ஒளிந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது அந்த சிறுவன் கழிவறை என் கதவை சரமாரியாக தாக்கியதால் தற்காப்புக்காக சிறுவனை உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: பற்றி எரியும் பிரம்மாண்ட தீ... 2வது நாளாக தொடரும் போராட்டம்... 20 லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து முயற்சி...!

இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, சிறுவர்களை தட்டிக் கேட்ட சார்பு ஆய்வாளரை அச்சிறுவர்கள் அரிவாளால் வெட்ட முயன்றதாகவும், சிறுவனை தற்காப்புக்காக சார்பு ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டதாகவும் வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
அரிவாளுடன் சிறுவன் துரத்தியதால், சார்பு ஆய்வாளர் ஒரு வீட்டின் கழிவறையில் ஒளிந்து கொண்டு இருந்தாகவும் , அங்கிருந்து தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாகவும், ஸ்டாலின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அவல நிலைக்கு சென்றுள்ளது என்பதை இந்த செய்தி உணர்த்துகிறது என்றும் கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் புழக்கம் குறித்து தொடர்ந்து எச்சரித்து வருவதாகவும் சிறார்கள் வரை தற்போது போதைப்பொருளால் பாதிக்கப்பட்டு, குற்றச் செயலில் ஈடுபடுவது பெரும் வேதனைக்குரிய விஷயம் என்றும் கூறினார்.
சட்டம் ஒழுங்கையே காக்க வக்கற்ற இந்த ஆட்சியை அகற்றுவதே, தமிழ்நாட்டை மீட்பதற்கான முதற்படி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: திடீரென பரவிய புகைமூட்டம்... திணறிய பயணிகள்... வந்தே பாரத் ரயிலில் பரபரப்பு...!