நெல்லை மாநகராட்சியில் 50க்கும் மேலான வார்டுகள் உள்ளன. இங்கு தினமும் டன் கணக்கில் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது.
இந்த குப்பைகள் அனைத்தும் லாரிகள் மூலமாக மாநகராட்சி கட்டுப்பாட்டில் நெல்லை ராமையன்பட்டி பகுதியில் உள்ள 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பை கிடங்கில் சேகரித்து வைக்கப்படுகிறது. இந்த குப்பை கிடங்கில் நேற்று மதியம் 3:30 மணி அளவில் திடீரென தீ பிடித்துள்ளது. இந்த தீயானது 100 ஏக்கர் முழுவதும் லட்சக்கணக்கான டன் சேகரித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளில் முழுவதும் எரிய துவங்கி உள்ளது.
இதனால் ராமையன்பட்டி நெல்லை மாநகர் பகுதி சுற்றுவட்டார 15 கிலோமீட்டர் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்துள்ளது. இதனால் தச்சநல்லூர் ராமாயன்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் மக்கள் தொடர்ந்து தவித்தனர். தகவல் அறிந்த நெல்லை பாளையங்கோட்டை, கங்கைகொண்டான் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பல ஏக்கர்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ள குப்பைகளில் எரியும் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: திடீரென பரவிய புகைமூட்டம்... திணறிய பயணிகள்... வந்தே பாரத் ரயிலில் பரபரப்பு...!
இருந்த போதிலும் காற்றின் வேகம் அதிகரித்த நிலையில் அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தீயானது வேகமாக அருகில் எரியாமல் இருக்கும் குப்பைகளிலும் பிடிக்க துவங்கி குப்பை கிடங்கு முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகின்றது.
மாநகராட்சி அதிகாரிகளும் குப்பைக் கிடங்கில் எரியும் தீயை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தற்பொழுது 2 வது நாளாக இன்றும் 16 மணி நேர போராட்டத்திற்கு பிறகும் தீயானது கட்டுக்குள் வராததால் தீயணைப்புத் துறையினர் தீயை அணைப்பதற்காக போராடி வருகின்றனர்.
20 தண்ணிலாரிகளுக்கு மேல் வரவழைக்கப்பட்டு தண்ணீரைப் பாய்ச்சி அனைத்து போதிலும் தீயை அணைக்க முடியவில்லை. கரும்புகையானது தொடர்ந்து பரவி வருகிறது இதனால் நெல்லை நகர் பகுதி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இனி குடியிருப்பு பகுதிகளுக்குள் கூட்டு பிரார்த்தனை கூடாது.. ஷாக் கொடுத்த ஐகோர்ட்..!