கோவை குனியமுத்தூரில் அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது அதிமுக நிர்வாகிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜெனரேட்டர் தொடர்ந்து மூன்று முறை பழுது ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்த எடப்பாடி பழனிச்சாமி
அண்ணா திமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முதல் கட்ட பிரச்சாரத்தை மேட்டுப்பாளையத்தில் தொடங்கி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரம் செய்து வந்த நிலையில், நேற்று 2ம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் துவங்கினார்.
முதலில் செல்வபுரம் மற்றும் தொண்டாமுத்தூர் பகுதிகளில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு, கோவை குனியமுத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். பொதுமக்கள் திரண்டு இருந்த பகுதியில் மின் விளக்கு வசதிக்காக கட்சி நிர்வாகிகள் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் எடுத்து நகர் பகுதியில் விளக்குகள் எரிய வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்லாத எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது மூன்று முறை ஜெனரேட்டர் பழுதாகி மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்
இதையும் படிங்க: சும்மா உருட்டக்கூடாது! முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி இபிஎஸ் சரமாரி கேள்வி...
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று அதற்கு இந்த கூட்டமே சாட்சி என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #BREAKING: தொடரும் இபிஎஸ் வேட்டை… சத்யபாமா கட்சிப்பதவி பறிப்பு! அதிரடி அறிவிப்பு