தமிழகத்தில் நல்லாட்சி தருவதற்கு எல்லோரையும் அழையுங்கள் என்றும் வெளியே சென்றவர்களை நம் கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார். அப்படி செய்யவில்லை என்றால் அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவேன் எனவும் எடப்பாடி பழனிச்சாமி நடத்தும் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க மாட்டேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் 10 நாட்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு கெடு விதித்து இருந்தார்.
அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அதுமட்டுமல்லாது செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஏழு பேரை கட்சிக் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கம் செய்துள்ளார். ஆனால், கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியை தொடர்ந்து மேற்கொள்வேன் என்று செங்கோட்டையன் தெரிவித்தார். செங்கோட்டையனுக்கு ஆதரவாக முன்னாள் எம்பி சத்யபாமா இருந்து வருகிறார்.

அதன்படி செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா உள்ளிட்ட இதர நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் தங்களது கட்சிப் பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறப்பட்டது.
இதையும் படிங்க: #BREAKING: 1000 பேர் கூண்டோடு ராஜினாமா! என்னதான் நடக்குது அதிமுகவில்? இபிஎஸ் செம ஷாக்…
செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஏராளமானோர் ராஜினாமா கடிதம் கொடுக்க தயாராக இருப்பதாக சத்தியபாமா தெரிவித்தார். தான் கட்சி பொறுப்பை ராஜினாமா செய்ய போகிறேன் என்றும் எல்லாவற்றுக்கும் தான் தயார் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில், அதிமுகவின் அனைத்து விதமான பொறுப்புகளில் இருந்தும் சத்தியபாமா விடுவிக்கப்பட்டுள்ளார். கழக தலைமை செயற்குழு உறுப்பினர் உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் பொறுப்பிலிருந்தும் சத்தியபாமாவை நீக்கி எடப்பாடி பழனிச்சாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அண்ணன் வாராரு! இபிஎஸ்-இன் அடுத்த கட்ட சூறாவளி சுற்றுப்பயணம்... முழு விவரம்...