சிபில் ஸ்கோர் அடிப்படையில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கும் நடைமுறையில் பல சிக்கல்கள் உள்ளன, குறிப்பாக தமிழ்நாட்டில் இது குறித்து விவசாயிகள் மற்றும் அவர்களின் சங்கங்கள் பல்வேறு கவலைகளை எழுப்பியுள்ளன.
சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களில் பயிர் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. பேரிடர் காலங்களில் கடனை திருப்பிச் செலுத்த முடியாதபோது, சிபில் ஸ்கோர் குறைகிறது.
இதனால் அடுத்த கடன் பெறுவது கடினமாக உள்ளது என குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. விவசாயம் இயற்கை பேரிடர்கள் மற்றும் சந்தை ஏற்றத்தாழ்வுகளுக்கு உட்பட்டது.
இதையும் படிங்க: திராவிட மாடல் இல்ல... FAILURE மாடல்! திமுகவை விளாசிய இபிஎஸ்..!
இதனால், விவசாயிகள் கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாமல் போகலாம், இது அவர்களின் சிபில் ஸ்கோரை பாதிக்கிறது. இதனால், அவர்கள் மீண்டும் கடன் பெறுவதற்கு தகுதியற்றவர்களாகக் கருதப்படுகின்றனர்.
பொதுத்துறை வங்கிகளில் ஏற்கனவே கடன் வாங்கிய விவசாயிகள், மற்றொரு வங்கியில் கடன் கோரும்போது, சிபில் ஸ்கோர் அடிப்படையில் மறுக்கப்படுகின்றனர். இது குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில் பயிர் கடன் பெற முடியாமல் விவசாயிகள் தவிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன

இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பயிர் கடன் பெறுவதற்கு சிபில் ஸ்கோர் கேட்கப்படுவது குறித்து பிரதமர் மோடியிடம் மனு கொடுத்ததாக தெரிவித்தார்.
சிபில் ஸ்கோர் பிரச்சினையால் விவசாய கடன்கள் பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக சுட்டி காட்டினார். பிரதமர் நரேந்திர மோடியிடம் தான் பேசிய பின்னரே சிபில் ஸ்கோர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது எனக் கூறினார்.
விவசாயிகள் பயிர் கடன் பெறுவதில் சிபில் ஸ்கோர் பார்ப்பது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் பழைய முறையிலேயே விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க சுற்றறிக்கை வெளியாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
விவசாயிகளின் பிரச்சனையை தீர்த்து வைத்ததில் மகிழ்ச்சி என தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக - பாஜக கூட்டணியில் யார் சேர்வார்கள் என அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் காங்கிரஸ் தலைமையில் தமிழக வெற்றிக்கழக கூட்டணி அமைகிறதா என்று கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதம் உள்ளதால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என பதில் அளித்தார்.
இதையும் படிங்க: எழுதி கொடுத்து படிக்க ஸ்டாலினா? மனசுல பட்டத பேசுற இபிஎஸ்! வலுக்கும் விமர்சனங்கள்