2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் சுற்றுப்பயணங்கள் மற்றும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். கடந்த 13ம் தேதி திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
திருவாரூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, ஜேசிபி மூலம் பிரம்மாண்ட மாலை விஜய்க்கு அணிவிக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கருதி தமிழக வெற்றி கழகத்தினர் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழக வெற்றி கழகம், திமுக அரசு வேண்டுமென்றே செயல்படுவதாக குற்றம்சாட்டி வருகிறது. இந்த நிலையில், கிரேன் மூலம் மாலை போட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து இருப்பது மேலும் விமர்சனங்களை அதிகரித்து உள்ளது.
இதையும் படிங்க: உண்மையாவே திமுகவை எதிர்த்தா விஜய் அதிமுகவுக்கு வரணும்! சவால்விட்ட மாஜி அமைச்சர்...
நாடாளுமன்ற தேர்தலின் பிரச்சாரத்தின் போது திமுக சார்பில் போட்டியிட்ட தமிழச்சி தங்க பாண்டியனுக்கு ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ரோஜா பூக்கள் கொட்டப்பட்டும், கிரேன் மூலம் பெரிய அளவிலான மாலை அணிவிக்கப்பட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. திமுக செய்தால் இனிக்கிறது., தவெக செய்தால் கசக்கிறதா என்றும் தமிழச்சி தங்கபாண்டியன் மீதும், இந்த ஏற்பாடுகளை செய்த திமுக நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதா என்ற கேள்வியும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: பாஜகவின் உத்தியை கையில் எடுத்த விஜய்... சாட்டையை சுழற்றிய ஆளூர் ஷா நவாஸ்!