ஜூலை 7 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறார். இந்த சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து இந்த சுற்றுப்பயணம் தொடங்கியது. ஜூலை 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டம் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது.
மாநில உரிமைகள், அமைதி, வளர்ச்சி, மற்றும் செழிப்பை மீட்டெடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். அதிமுகவில் ஒரு தொண்டனை கூட யாராலும் அச்சுறுத்த முடியாது என்று அப்போது பேசினார். ஆட்சி அதிகாரம் வேண்டுமெனில் திமுகவினர் யார் காலில் வேண்டுமானாலும் விடுவார்கள் என்றும் தெரிவித்தார். திமுகவினர் கூட்டணி வைத்தால் நல்லது அதிமுக கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சியா என இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.

வாஜ்பாயுடன் கருணாநிதி இருக்கும் புகைப்படத்தை காண்பித்து குற்றச்சாட்டை முன்வைத்தார். பாஜகவுடன் ஏற்கனவே கூட்டணி வைத்த திமுகவிற்கு பேசுவதற்கு தகுதியுள்ளதா என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, பயம் என்ற சொல்லை அதிமுக வெற்றி இல்லை என்றும் அதிமுக தொண்டனையும் யாராலும் பயமுறுத்த முடியாது என்றும் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் இருந்து ஒரு பெண் என்றும் பாராமல் ஜெயலலிதாவை தாக்கியவர்கள் தான் திமுகவினர் என்றும் நமது அம்மாவை தாக்கிய திமுக தற்போது நமக்கு சவால் விடுவதாகவும் கூறினார். ஜெயலலிதாவை கொலை செய்ய எத்தனையோ முயற்சிகள் நடந்ததாகவும் எடப்பாடி பழனிச்சாமி வரும் குற்றச்சாட்டை முன்வைத்தார். மேலும், ஜெயலலிதா மறைந்த பிறகு அதிமுகவை மு.க ஸ்டாலின் உடைக்க பார்த்தார் என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: “100 முறை சொல்லிட்டேன்... எத்தனை முறை கேட்பீங்க...” - எடப்பாடி பழனிசாமியால் கடுப்பான நயினார் நாகேந்திரன்...!
இதையும் படிங்க: #BYEBYE STALIN கதற விடுது..! இன்னும் கதற விடுவோமா? அடித்து தூள் கிளப்பும் இபிஎஸ்..!