2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுகவின் நிலை குறித்து திமுகவும், திமுகவின் குறைபாடுகளை அதிமுகவும் பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர். ஒருவருக்கொருவர் சினிமா டயலாக்குகளை கூட பயன்படுத்தி கிண்டல் அடித்து வருவதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்ட என்ற டயலாக்கை முதல்வர் ஸ்டாலின் எடப்பாடிக்கு கூறிய நிலையில், யாரோ அவர் மூளைக்குள் சென்று நல்ல ஆட்சி செய்வதாக நம்ப வைத்து விட்டதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
தமிழக மக்கள் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிச்சாமிக்கு டாட்டா - பை பை சொல்லிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்றும் சுந்தரா டிராவல்ஸ் பேருந்தில் இருந்து வரும் புகை போல ஈபிஎஸ் வாயிலிருந்து பொய்யாக வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்தார். வரும் தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்கள் நிரந்தரமாக குட் பை சொல்வார்கள் என்றும் கூறினார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நீங்கள் எங்கு இருந்தாலும் உங்கள் எண்ணம் முழுக்க எழுச்சி பயணத்தை சுற்றிய தான் இருக்கும் என்ன தெரியும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தான் பிரமோஷன் செய்வதாக கூறுகிறார் முதல்வர்., ஆனால் அம்மாவின் திட்டத்தை காப்பி பேஸ்ட் செய்கிறீர்களே இதுதான் நீங்கள் விரும்பும் விளம்பரமா என தெரிவித்தார். சொந்தமாக ஒரு திட்டத்தை யோசித்து நிறைவேற்ற வக்கில்லாமல் அம்மாவின் திட்டத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டுகிறீர்களே வெட்கமாக இல்லையா என்று கடுமையாக சாடினார். அதுக்கு நீ சரிப்பட்டு வர மாட்ட என்று தன்னைக் கூறுகிறாரே., ஸ்டாலின் அவர்களே நீ எதுக்குமே சரிப்பட்டு வர மாட்டார் என்பதை மக்கள் சொல்லி கொண்டு இருப்பதாக விமர்சித்தார்.
யாரோ சிலர் ஸ்டாலின் மூளைக்குள்ளே போய் இவர் நடத்துவது நல்ல ஆட்சி தான் என்று நம்ப வைத்து விட்டார்கள் போல என்றும் குட் பை சொல்ல போறாங்களாம் மக்கள்., அது கண்ணாடி என பதிலடி கொடுத்துள்ளார். மேலும், நீங்கள் சொல்லும் ByeByeStalin அவரை கதற விடுகிறது., அதனால், இன்னும் கதற விடுவோமா என்றும் 234 தொகுதிகளிலும் சொல்வோமா எனவும் கூறினார்.
இதையும் படிங்க: உழவன் செயலி, பயிர் கடன் தள்ளுபடி..! நலத்திட்டங்களை பட்டியலிட்ட இபிஎஸ்..!
இதையும் படிங்க: அதிகாரம் கையில கிடைச்சா இப்படியா பண்ணுவீங்க? ஒரே அராஜகம்.. விளாசிய இபிஎஸ்..!