த.வெ.க, 2024 பிப்ரவரியில் விஜய் தொடங்கிய கட்சி. ஊழல், சாதி-மத பிளவுகளை எதிர்த்து, சமூக நீதி, முன்னேற்றம் என்பவற்றை மையமாகக் கொண்டு செயல்படுவதாக அறிவித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல், 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்து நிற்கும் என அறிவித்தது. இதற்கிடையில், கட்சியின் மாநாடுகள், உறுப்பினர் சேர்க்கை இயக்கங்கள் ஆகியவை மக்களிடையே வரவேற்பைப் பெற்றன.
அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை உற்சாகத்துடன் தொடங்கி நடத்தி வந்தார். அலைக்கடலென மக்கள் கூட்டம் திரண்டு விஜய்க்கு பேராதரவு கொடுத்தனர். கரூர் சம்பவம் தமிழக வெற்றி கழகத்தை இந்த நிகழ்வு முடக்கிய நிலையில் தற்போது மீண்டு வருகிறது. சமீபத்தில் விஜய் புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் ஈரோட்டில் அவர் பரப்புரை மேற்கொள்கிறார். ஜனவரி மாதம் இரண்டாம் வாரம் வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இந்த நிலையில் ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் நேர்காணல் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களுக்கான உத்தேச பட்டியலை விஜய் தயாரித்து வைத்துள்ளதாகவும் தொகுதிக்கு நான்கு பேர் வீதம் அவர் தேர்வு செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 60% மாவட்ட செயலாளர்களுக்கும், பெண்களுக்கும் நாற்பது சதவீதம் பிரபலங்களுக்கும் மாநில நிர்வாகிகளுக்கும் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பணத்த வாங்கிட்டு பொறுப்பு தராரு... வடசென்னை மா. செ. மீது தவெக தொண்டர்கள் புகார்...!
பிரபல தியேட்டர்களின் உரிமையாளர்கள் சிலரும் சென்னை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட குறிப்பிட்ட தொகுதிகளில் போட்டியிட இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து உள்ளன. இது மட்டுமல்லாத தமிழக வெற்றி கழகத்தில் இணையும் முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாகவும் பொங்கலுக்கு பிறகு வேட்பாளர் தீர்வை நடத்தி விஜய் உடனடியாக அதற்கான முடிவை அறிவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்? டெல்லி செல்லும் நயினார் இபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு...!