தமிழக அரசியலின் புதிய அலை என்று கொண்டாடப்பட்ட தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க), நடிகர் விஜயின் தலைமையில் 2024 பிப்ரவரியில் தொடங்கியது. சமூக நீதி, சமத்துவம், அரசியல் மாற்றம் என்பனவற்றை முழக்கமாகக் கொண்டாடி, 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் என அறிவித்தது.
ஆனால், கட்சியின் வளர்ச்சியின் நடுவே, உள்ளார்ந்த பிரச்சினைகள் வெளிப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கட்சி பொறுப்புகளுக்கு பணம் பெறுவதாக எழுந்த குற்றச்சாட்டுகள், த.வெ.கவை ஒரு அரசியல் புயலாக மாற்றியுள்ளன. கட்சியின் இளைஞர் ஆதரவு, இந்தப் புகார்களால் சில இடங்களில் சிதறியது. இந்தக் குற்றச்சாட்டுகள், தமிழக அரசியலின் பொதுவான நிலையைப் பிரதிபலிக்கின்றன.

வடசென்னை கிழக்கு தவெக மாவட்ட செயலாளர் சுறாவேலு மீது அக்கட்சி தொண்டர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். தங்களுக்கு இதுவரை எந்த ஒரு பொறுப்பும் வழங்காமல் தட்டிக் கழித்து வருவதாக குற்றச்சாட்டி உள்ளனர். பணம் வாங்கிக் கொண்டு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் பொறுப்பு தருவதாக கூறி தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் முறையிட தொண்டர்கள் வருகை தந்தனர்.
இதையும் படிங்க: விஜய்க்கு எல்லாம் ஓட்டு விழும்ன்னு கனவுல கூட நினைக்காதீங்க... திமுகவில் இணைந்த P.T. செல்வகுமார் விமர்சனம்...!
பனையூரில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை சந்தித்து மனு அளிக்க 50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்தனர். மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்று வருவதால் உள்ளே அனுமதி இல்லை என தெரிவித்ததாக தகவல் வெளியானது. இதனால், காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
இதையும் படிங்க: ட்விஸ்ட்... விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வக்குமார் திமுகவில் ஐக்கியம்...!