மின்வாரியத்தில் 700 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பொறியாளர்களாக வந்தவர்களுக்கு உதவி செயல் பொறியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு விவகாரம் சமீபத்தில் தீர்க்கப்பட்டுள்ளது. கடந்த 2000 முதல் 2002 ஆம் ஆண்டு வரை உதவி பொறியாளர்களாக (மின்னியல் பிரிவு) பணியில் சேர்ந்தவர்கள், பின்னர் உதவி செயற்பொறியாளர்களாக உயர்வு பெற்று பணியாற்றி வந்தனர்.
அவர்களில் தகுதியுடையவர்களுக்கு செயற்பொறியாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக தகுதியுள்ள 379 பொறியாளர்களில் 300 பேருக்கு ஒரே நேரத்தில் பதவி உயர்வு ஆணைகள் வழங்கப்பட்டன. இது மின்வாரிய வரலாற்றில் இதுபோன்ற பெரிய எண்ணிக்கையில் ஒரே சமயத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்ட முதல் நிகழ்வாகக் கருதப்படுகிறது.

பணிமூப்புப் பட்டியல், தகுதி மற்றும் வாரிய விதிமுறைகளின் அடிப்படையில் இந்த உயர்வுகள் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டன. பல ஆண்டுகளாக பதவி உயர்வுக்காக காத்திருந்த பொறியாளர்களின் நீண்டகால கோரிக்கைக்கு இதன் மூலம் தீர்வு கிடைத்துள்ளது. இதனால் மின்வாரிய பொறியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது. இந்த உயர்வுகள் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும், நிர்வாகத்தை மேலும் திறம்பட செயல்படுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பயன்பாட்டில் இல்லாத மின் இணைப்புகள் ரத்து..! மின்வாரியம் புதிய நடவடிக்கை..!!
மேலும், இதேபோன்ற நிலுவையில் உள்ள பிற பிரிவுகளிலும் பதவி உயர்வுகள் விரைவில் வழங்கப்படும் என்றும், மின்வாரியத்தில் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க புதிய பணியமர்த்தல்கள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் மின்சார விநியோகத்தின் தரத்தை மேம்படுத்தவும், ஊழியர்களின் மனஉறுதியை உயர்த்தவும் உதவும் என நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: தனியார் மயமாகிறதா டாஸ்மாக்..? கடைகளை மூடுவோம்... விற்பனையாளர்கள் நலச்சங்கம் திட்டவட்டம்..!!