நடிகை கவுதமி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில், எனது மகளின் பராமரிப்பு செலவு மற்றும் எனது மருத்துவ சிகிச்சைக்காக எனக்கு சொந்தமான இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்தேன். இந்த நேரத்தில் தொழிலதிபர் அழகப்பன் என்பவர் அந்த நிலத்தை விற்றுத்தருவதற்கு உதவி செய்வதாக கூறினார். எனவே எனது நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான அதிகாரத்தை (பவர் ஆப் அட்டர்னி) அழகப்பனுக்கு வழங்கினேன். போலி ஆவணங்களை தயாரித்து அழகப்பனும், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் எனது இடத்தை அபகரித்து மோசடி செய்துவிட்டனர்.

இதுகுறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, எனக்கு சொந்தமான இடத்தை மீட்டு தந்து, அழகப்பன், அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். மேலும் பாஜக கட்சியில் புகார் அளித்தும் மூத்த நிர்வாகிகள் அழகப்பனுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி நடிகை கவுதமி பாஜக கட்சியில் இருந்து வெளியேறினார். நடிகை கவுதமி அளித்த புகாரின் பேரில் அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதையும் படிங்க: ரூ.160 கோடி சொத்து பறிமுதல்... அதிரடி ரெய்டில் களமிறங்கிய அமலாக்கத்துறை!!

மேலும் நில மோசடி புகார் தொடர்பாக அழகப்பன் மற்றும் அவரது மனைவிக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனிடையே நடிகை கவுதமி அளித்த நில மோசடி புகாரில் முக்கிய நபராக தேடப்பட்டு வந்த அழகப்பன், அவரது மனைவி நாச்சியம்மாள், சதீஷ் குமார் உட்பட 6 பேரை கேரளாவின் திருச்சூரில் வைத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், அழகப்பன் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டு வெளிநாட்டு முதலீடு செய்த விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். சாட்சியங்கள் என்ற அடிப்படையில் நடிகை கௌதமியிடம் இன்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக உள்ள நடிகை கௌதமி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி தனது விளக்கங்களை வழங்கியுள்ளார். காலை 10 மணி முதல் நடந்த விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING: அஜித் பிறப்புறுப்பில் கூட மிளகாய் பொடி... சித்திரவதை செய்து கொலை.... நீதிபதிகள் அதிர்ச்சி..!