சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்று உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடக்கிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் போலீஸ் கூட்டாக சேர்ந்து இந்த குற்றச்சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாகவும், ஒரு மாநிலம் தன் குடிமகனையை கொலை செய்துள்ளதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

அஜித் குமாரின் உடலில் ஒரு பாகம் இன்றி முழுமையாக தாக்கப்பட்டுள்ளார் என்றும் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அறிக்கையை படிக்க படிக்க மனம் பதறுவதாகவும் தெரிவித்தனர். குறைந்தபட்சம் ஒரு சீனியர் அலுவலரையாவது அந்த குழு கொண்டு இருக்க வேண்டும் என்றும் மடப்புரம் கோவிலின் சிசிடிவி காட்சிகள் எங்கே என்றும் கேள்வி எழுப்பினர். நடந்த சம்பவங்கள் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளதா என்றும் கேட்டனர்.
இதையும் படிங்க: #BREAKING: திமுகவில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம்.. பொதுக்குழு கூட்டத்தின் முக்கிய முடிவு..!

அப்போது, அனைத்து உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க தயார் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அரசு தற்போது உரிய நடவடிக்கை எடுத்துள்ளது இனிவரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்ற நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அறிக்கையை தாக்கல் செய்ய இரண்டு நாட்கள் அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை எஸ்ஐ ராமச்சந்திரன் எடுத்துச் சென்றதாக கோவில் உதவி ஆணையர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் குமார் மரணம் வழக்கின் சாட்சியங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளதாக அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சம்பவ இடத்தை சாட்சியங்களை சேகரித்தது யார் அங்கு ரத்த கறைகள், சிறுநீர் அடையாளங்கள் உள்ளதா என கேள்வி எழுப்பினர். நாட்கள் சொல்ல செல்ல சாட்சிகள் அளிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அஜித் குமார் மீது இவ்வளவு காயங்கள் உள்ளது எதை வைத்து அடித்தார்கள் என்றும் கேள்வி எழுப்பினர். மேலும் அஜித் தாக்கப்பட்ட இடத்தில் ரத்தக்கரையை சேகரிக்கவில்லை என்றும் சாட்சியங்களை சேகரிக்காமல் எஸ். பி என்ன செய்து கொண்டு இருந்தார்., சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து அஜித்குமாரை போலீசார் தாக்கியதை வீடியோ பதிவு செய்த சக்தீஸ்வரன் நீதிபதிகளிடம் சாட்சியங்கள் அளித்தார். தாக்கப்பட்ட வீடியோ எடுத்த நபரிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளார். அங்கு என்ன நடந்தது? யார் யார் அங்கு இருந்தார்கள்? எவ்வளவு நேரம் வீடியோ எடுக்கப்பட்டது? எங்கிருந்து வீடியோ எடுக்கப்பட்டது உள்ளிட்ட கேள்விகளை நீதிபதிகள் கேட்டுள்ளனர். கோவில் பின்புறம் உள்ள கழிவறையில் இருந்து சிறிது நேரம் மட்டுமே வீடியோ எடுத்தேன் என சக்தீஸ்வரன் சாட்சியமளித்துள்ளார். கழிவறையில் இருந்து வீடியோ எடுத்த நிலையில் அச்சத்தின் காரணமாக சிறிது நேரம் மட்டுமே எடுத்ததாகவும் தெரிவித்தார். அஜித் குமார் மரண வழக்கில் காவலர்கள் கைது செய்யப்பட்டது, கண்துடைப்பு என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: போட்டோஷூட்- னா FULL MAKEUP ல வந்துடுவாரு... கூச்சமே இல்லையா? முதல்வர் மீது அதிமுக கடும் தாக்கு!