சி.என். அண்ணாதுரை 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று சென்னை மாகாணத்தில் உள்ள காஞ்சிபுரத்தில் பிறந்தார். அவரது பிறந்தநாள், தமிழ்நாட்டின் மக்களால், குறிப்பாக திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்களால், ஒரு முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. இது அவரது பங்களிப்புகளை நினைவுகூரும் ஒரு விழாவாக மட்டுமல்லாமல், அவரது கொள்கைகளையும், சமூக நீதி, பகுத்தறிவு, மற்றும் தமிழர் உரிமைகளுக்காக அவர் ஆற்றிய பணிகளையும் போற்றும் ஒரு நாளாக அமைகிறது.
1967 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்று, இந்தியாவின் முதல் பிராந்திய அரசியல் கட்சி ஆட்சியைப் பிடித்த வரலாற்றை உருவாக்கியவர் அண்ணா. அவரது ஆட்சியில், தமிழ்நாட்டில் சமூக நீதி, கல்வி மற்றும் மொழி உரிமைகளுக்காக பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன. குறிப்பாக, இந்தி மொழித் திணிப்புக்கு எதிராக அவர் மேற்கொண்ட போராட்டங்கள், தமிழ் மொழியின் பெருமையை உயர்த்தியதோடு, தமிழர் அடையாளத்தை வலுப்படுத்தின. இந்தக் கொள்கைகள் இன்றும் தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக வாழ்வில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் மக்களுக்கான ஆட்சியை நிறுவ உறுதி ஏற்போம் என தெரிவித்தார். தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றால் அண்ணா என்றும் அண்ணா என்றால் தமிழ்நாடு, தமிழ், திராவிடம் என்றும் தெரிவித்தார். இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சி ஆட்சி அமைக்க முடியுமா., நாட்டுக்குள் ஒரு தமிழ்நாடா என்று சந்தேக கேள்விகள் கேட்ட காலத்தில் தன் செயலால், சாதனையால் பதில் சொன்ன தென்னாட்டுத் தென்றல், நம் அண்ணா என்று கூறினார். அண்ணாவைப் பெயரில் மட்டும் அல்ல கொள்கையில், செயலில், அரசியல் அறத்தில் 53 ஆண்டுகளாக பெருமையோடு அதிமுக ஏந்தி நிற்கிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவினர் கவனத்திற்கு! இபிஎஸ் சுற்றுப்பயண தேதியில் மாற்றமாம்... எப்ப தெரியுமா?
குடும்பப் பின்புலமற்ற நம்மைப் போன்ற சாமானியர்களை அரியணை ஏற்றும் திராவிட அரசியலின் ஈடு இணையற்ற தலைமகனான பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்தநாளான இன்று, குடும்ப ஆட்சியின் பிடியில் சிக்கியுள்ள தமிழகத்தை மீட்டு, சாமானிய மக்களுக்கான அண்ணாயிசம் போற்றும் ஆட்சியை அதிமுக தலைமையில் நிறுவிட உறுதியேற்போம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: கொஞ்சம் பொறுங்க... அதிமுக ஆட்சி வரட்டும் எல்லாம் சரியாகும்! இபிஎஸ் நம்பிக்கை