பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததில் இருந்து திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. பாஜகவுக்கு அதிமுக அடிமையாகி விட்டதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து விட்டு வந்தபோது முகத்தை மூடி கொண்டதாக பரவிய தகவலை திமுக விமர்சித்தது. முகத்தை மட்டும் தான் துடைத்ததாகவும், வேண்டுமென்றே அவதூறு பரப்பப்படுவதாகவும் அதிமுக தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில், சேலம் ஓமலூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, யாரை விமர்சனம் செய்தார்களோ அவர்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரத்தின கம்பளம் திரித்ததாக தெரிவித்தார். பிரதமரை அழைத்து திமுக அரசு நடத்திய நிகழ்ச்சிகளை எடப்பாடி பழனிச்சாமி பட்டியலிட்டார். எதிர்க்கட்சியாக இருந்தபோது பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டியவர் ஸ்டாலின் என்றும் குறிப்பிட்டார்.

சட்டமன்ற தேர்தலில் 117 தொகுதிகளில் போட்டியிட கூடும் என காங்கிரஸ் பேசியிருப்பதாகவும், ஆட்சியில் பங்கு என தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பேசி இருப்பதாகவும் குறிப்பிட்டார். தொடர்ந்து செந்தில் பாலாஜி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேசிய பழைய வீடியோவை செய்தியாளர்கள் முன்னிலையில் போட்டு காண்பித்து எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
இதையும் படிங்க: இதுக்குதான் அமித்ஷாவை சந்தித்தேன்! ஹப்பாடா... ஒரு வழியா சொல்லிட்டாரு பா... மௌனம் கலைத்த EPS
அதிமுகவை விமர்சிக்க திமுகவுக்கு எந்த தகுதியும், அருகதையும் இல்லை என்றார். அமைச்சர் ரகுபதி நன்றியை மறந்து செயல்படுவதாகவும் தெரிவித்தார். கிட்னி முறைகேடு நடந்துள்ளது அரசை ஒப்புக் கொண்டுள்ளதாகவும் கூறிய எடப்பாடி பழனிச்சாமி, கிட்னி திருட்டு விவகாரத்தை எளிமையாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING பரபரக்கும் அரசியல் களம்... டெல்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு...!