அதிமுகவுடன் கூட்டணி வைப்பதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்து வருகிறார். அதில் தமிழக வெற்றிக்கழகம் முக்கிய இடத்தை பெறுகிறது. அரசியலின் புதிய அலை என விஜய் கூறி வருகின்றனர். ஏற்கனவே அவரை கூட்டணிக்கு அழைத்த நிலையில் அதனை மறுப்பதாக விஜய் பேசி இருந்தார். பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக விஜயை கூட்டணிக்கு அழைக்கிறதே, அப்படியானால் கொள்கை எதிரி என பாஜகவை விஜய் கூறி வருவதால் எடப்பாடி பழனிச்சாமி பாஜக கூட்டணியை விட்டு வெளியேறுவாரா என்ற கேள்வி எழுந்தது.
தொடர்ந்து தமிழக வெற்றி கழகத்துடன் அதிமுக கூட்டணி வைக்கும் வகையிலேயே எடப்பாடி பழனிச்சாமி பேசி வந்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் சம்பவத்திற்கு உடனடியாக தமிழக வெற்றி கழகத்தை குறை சொல்லாமல் முழு பொறுப்பை ஆளும் திமுக அரசின் மீது வைத்தார். போலீஸ் பாதுகாப்பு போதுமானதாக இல்லை என அவர் கூறியது விஜயை ஆதரிப்பதாக இருந்தது.

இதனிடையே, தமிழக வெற்றிக்கழக கொடியை கொடுத்து எடப்பாடி பழனிச்சாமி தான் தனது சுற்றுப்பயணத்தின் போது பிடிக்க சொல்லி இருக்கிறார் என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். விஜய் கூட்டணிக்கு வருவார் என்றால் பாஜகவை எடப்பாடி பழனிச்சாமி கழற்றி விடுவார் என்ற தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி மிகவும் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார் என்றும் தற்போது அதிமுக - பாஜக கூட்டணி பலம் இழந்து காணப்படுகிறது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: கேக்கவே மாட்டீங்களா? அப்படி என்ன அவசரம்… TRB தேர்வு விவகாரத்தில் தலையிட்ட டிடிவி…!
அதிமுக கூட்டணி வரும் தேர்தலில் 15 சதவீத வாக்குகளை மட்டுமே பெறும் என்றும் இபிஎஸ்- ஐ முதலமைச்சராக ஆக்கவா விஜய் கட்சி தொடங்கியுள்ளார் என்றும் கரூர் சம்பவத்தைக் கொண்டு இபிஎஸ் அரசியல் செய்கிறார் எனவும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: விஜயை கைது செய்தால்... டிடிவி தினகரன் பரபரப்பு பிரஸ் மீட்...!