2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, கட்சியில் அதிகாரப் போட்டி உருவானது. ஜெயலலிதாவின் நம்பகமான தோழியாகவும், கட்சியில் செல்வாக்கு மிக்கவராகவும் இருந்த வி.கே. சசிகலா, கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். ஆனால், 2017 பிப்ரவரியில், 17 ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் சசிகலா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, சிறை தண்டனை பெற்றார். இதனால், அவர் முதலமைச்சர் பதவியை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டது.இந்தச் சூழலில், சசிகலாவின் ஆதரவுடன் எடப்பாடி கே. பழனிச்சாமி அ.தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, 2017 பிப்ரவரி 16 அன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
இந்த நியமனம், சசிகலாவின் செல்வாக்கு மற்றும் முடிவின் அடிப்படையில் நடந்ததாக பரவலாகக் கருதப்பட்டது, இதனால் சசிகலாவால் முதல்வர் ஆனவர் என்ற விமர்சனம் உருவானது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சரானது அவரது அரசியல் திறமை அல்லது கட்சியில் மூப்பு காரணமாக இல்லை, மாறாக சசிகலாவின் முடிவால் மட்டுமே நடந்தது என்று விமர்சகர்கள் கூறினர்.

இந்த நிலையில், சசிகலா தயவால் முதலமைச்சர் ஆனவர் பழனிச்சாமி என்றும் தகுதியால் முதலமைச்சர் ஆனவர் அல்ல எனவும் திமுக கடுமையாக விமர்சித்துள்ளது. அதேபோல யாராவது தன்னை முதலமைச்சர் ஆகிவிட மாட்டார்களா என்று அலைந்து திரிந்து கொண்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: திமுக கதை க்ளோஸ்! 2026ல் மக்கள் வீட்டுக்கு அனுப்ப போறாங்க.. எடப்பாடி பழனிச்சாமி உறுதி..!
அவரது நிலை தடுமாற்றத்துக்கு அதுதான் காரணம் என்றும் அவர் தகுதியைச் சொல்ல ஒரே ஒரு உருப்படியான காரணத்தை அவரால் சொல்ல முடியவில்லை எனவும் அவரது உளறல்கள் இதன் வெளிப்பாடுகள்தான் எனது விமர்சிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புயல் நேரத்துலையும் புயல் வேகத்துல அதிமுக செயல்பட்டுச்சு! இபிஎஸ் ஃபயர் ஸ்பீச்..!