2026 சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். அவ்வப்போது, விவசாயிகள், மீனவ பிரதிநிதிகள், நெசவாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறார். அது மட்டுமல்லாது அதிமுகவின் சாதனைகள் மற்றும் திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்து வருகிறார்.
திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும் என்ற அதிமுகவின் புதிய பிரச்சாரத் திட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டையில் தொடங்கி வைத்தார். மேலும் உண்மைக்காக உரிமைக்காக என்ற புதிய பிரச்சாரத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்த பிரச்சாரத் திட்டம் கவனத்தை ஈர்த்தது.

கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து அவரது சுற்றுப்பயணம் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, மக்களைச் சந்தித்து, திமுக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவதும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகள், அமைதி, வளர்ச்சி, மற்றும் செழிப்பை மீட்டெடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.
இதையும் படிங்க: இதைவிட அதிமுகவை யாராலும் கேவலப்படுத்த முடியாது! L.முருகன் பேச்சுக்கு இயக்குனர் அமீர் ரியாக்ஷன்
இந்த நிலையில், அடுத்த கட்டமாக மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், திருச்சுழி சட்டமன்றத் தொகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். நான்கு நாட்கள் மதுரை மாவட்டத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மதுரைக்கு வந்தடைந்தார். விமான நிலையத்தில் அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிச்சாமி முதுகில் குத்திட்டார்… ஏமாந்துட்டோம்! ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த பிரேமலதா