அதிமுக ஆட்சி காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீரை ஓமலூர், எடப்பாடி ,சங்ககிரி , மேட்டூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வறண்ட 100 ஏரிகளை நீர் நிரப்பும் அடிப்படையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. மேட்டூர் அணை 120 அடி எட்டும்போது நீரேற்று திட்டத்தின் மூலமாக நான்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பும் திட்டம் 565 கோடி மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு , ஆறு ஏரிகள் முதற்கட்டமாக நிரப்பப்பட்டது. ஏரிகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் பார்வையிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 53 மாத காலமாக திமுக ஆட்சியில் உள்ளது, ஆனால் இதுவரை இந்த திட்டத்தை முழுமையாக நிறைவேற்றவில்லை என தெரிவித்தார். 59 ஏரிகள் மட்டுமே நீர் நிரப்பப்பட்டுள்ளது., எஞ்சியுள்ள ஏரிகள் அனைத்தும் வறண்ட ஏரிகளாகவே உள்ளது என்றார்.
மேட்டூர் அணை நிரம்பி , உபரியாக தண்ணீர் வெளியேறி வீணாக கடலில் கலக்கிறது, அந்த காலக்கட்டத்தில் தான், 100 ஏரிகள் நிரப்பும் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் வேண்டும் என்றே , அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் ஆமை வேகத்தில் பணிகள் நடத்தப்பட்டு வருகிறது என கூறினார். முழுமையாக நூறு ஏரிகள் நிரப்பப்படுவது வாய்ப்புகள் குறைவு. எனவே மீண்டும் அதிமுக ஆட்சி வந்தவுடன் 100 ஏரிகளும் நிரப்பப்படும் என்றும் திமுக ஆட்சியில் வேண்டும் என்றே திட்டமிட்டு ஏதாவது ஒரு காரணத்தை கூறி அவர்கள் கடமையிலிருந்து தட்டிக் கழிக்கின்றனர் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: வேன் கெடச்சதும் ஒப்பாரி வெக்குறாரு EPS... செல்வப்பெருந்தகை கடும் விமர்சனம்...!

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்றும் நான்கு சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளதால் வேண்டுமென்றே திட்டத்தை புறக்கணித்துள்ளனர் என்றார். அத்திக்கடவு அவிநாசி திட்டம் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. நீரேற்று திட்டத்தின் மூலமாக வறட்சியான பகுதிகளுக்கு தங்களது பகுதிகளுக்கு தண்ணீர் வேண்டும் என்று கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றிக் கொடுக்கப்பட்டது. விவசாயிகளுக்கு எந்தெந்த முறையில் உதவ முடியுமோ அந்தந்த முறைகள் உதவும் அரசாக அதிமுக அரசு இருந்தது என தெரிவித்தார்.
தன்னுடைய அதிமுக தேர்தல் பிரச்சார பரப்புரைக்கு செல்லும் இடத்தில் எல்லாம் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் விருப்பப்பட்டு வரவேற்பு கொடுக்கிறார்கள் என்றும் நாங்கள் கூட தலைமையின் ஆணை பெற்று வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம், ஆனால் அவர்கள் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் விமர்சனம் செய்கிறார்கள். அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று கூறி உள்ளார்.
அதிமுக எப்போது பாஜகவுடன் கூட்டணி வைத்ததோ, அன்றையிலிருந்து இன்று வரை எங்களை பற்றி மட்டுமே விமர்சனம் செய்து வருகிறார்கள் என்றும் அதிமுக யாருடன் கூட்டணி வைத்தால் அவர்களுக்கு என்ன கஷ்டம் என்றும் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க: ஆட்டம் காணப் போகுது... திமுக கூட்டணியில் உரசல்... இபிஎஸ் உறுதி...!