திருவண்ணாமலை, சிவபெருமானின் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் இந்த புனித நகரம், உலகம் முழுவதும் உள்ள பக்தர்களின் மனதில் ஆழமான இடம் பெற்றுள்ளது. இங்கு அருணாசலேஸ்வரர் கோவிலுக்குப் பின்புறம் உயர்ந்து நிற்கும் அண்ணாமலை மலை, சிவபெருமானின் தன்மையாகவே வழிபடப்படுகிறது. இந்த மலையைச் சுற்றி 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கிரிவலப் பாதை, பக்தர்களின் ஆன்மீக பயணத்தின் மையமாகத் திகழ்கிறது. குறிப்பாக, ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி தினத்தில் நடைபெறும் கிரிவலம், லட்சக்கணக்கான பக்தர்களை இணைக்கும் ஒரு பெரிய விழாவாக மாறுகிறது.
இந்தப் பயணம், ஊழ்வினையை நீக்கி, பாவங்களைத் துடைத்து, மோட்சத்தை அளிக்கும் என்பது ஐதீகம். ஆனால், சமீபகாலமாக இந்தப் புனித நிகழ்வு, அதிகரித்து வரும் கூட்ட நெரிசலால் சவால்களை எதிர்கொள்கிறது. ஒவ்வொரு பௌர்ணமியிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், கிரிவலப் பாதையில் ஒரு அடி கூட நகர முடியாத அளவிற்கு நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசல் சவால்களை சமாளிக்க, அரசு சிறப்பு ரயில்கள், 1400க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்குகிறது. குடிநீர், கழிப்பறைகள், கிரிவலப் பாதையில் மின்விளக்குகள் போன்ற முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இருப்பினும் கட்டுக்கடங்காத கூட்டத்தால் செய்வதறியாவது திணறும் நிலை ஏற்படுகிறது. சமீப காலமாக ஆந்திராவில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருவதால் மேலும் நெரிசல் அதிகரித்து வருகிறது. பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களிலிருந்து திருவண்ணாமலை கோவிலுக்கு செல்வதற்காக அதிகளவில் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. ஏராளமானோர் ஆட்டோ சேவையை பயன்படுத்துவதால் நெரிசல் ஏற்படுவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: முடிந்தது தவெக மாநாடு.. பாரபத்தி பகுதியில் டிராஃபிக் ஜாம்.. ஊர்ந்து செல்லும் வாகனங்கள்..!!
இன்றைய தினம் பௌர்ணமி என்பதால் அதிக அளவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஆட்டோ ஓட்டுனர்களால் பக்தர்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சன்னதி தெரு, தாளகிரி ஐயர் தெரு, கோபால் பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் ஆட்டோ ஓட்டுநர்கள் பக்தர்களை ஆங்காங்கே இறக்கிவிட்டு, ஏற்றிச் செல்வதால் போக்குவரத்து தம்பித்துள்ளது.
இதையும் படிங்க: விண்ணை பிளந்த ஓம் நமச்சிவாய.. ஆடி பௌர்ணமி.. திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள்..!!