திருப்பூர் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில், மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகேந்திரனுக்கு சொந்தமான ஒரு தோட்டம் அமைந்துள்ளது.
இந்தத் தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவர் மற்றும் அவரது இரு மகன்களான தங்கபாண்டி மற்றும் மணிகண்டன் ஆகியோர் பணியாற்றி வந்தனர்.
இவர்கள் மூவரும் மது போதையில் இருந்ததாகவும், தந்தை மூர்த்தியை அவரது மகன்கள் தாக்குவதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், குடிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் மற்றும் அவரது காவல் வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
இதையும் படிங்க: டெல்டா, தென் மாவட்டங்களில் டப்பா டான்ஸ் ஆடப்போகுது... அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஓபிஎஸால் காத்திருக்கும் பேராபத்து...!
சண்முகவேல், தோட்டத்தில் நடந்து கொண்டிருந்த தகராறை சமாதானப்படுத்த முயன்றதாக தெரிகிறதுm அப்போது, மூர்த்தி மற்றும் அவரது மகன்கள் மது போதையில் இருந்த அவர்கள் சண்முகவேலை அரிவாளால் வெட்டி உள்ளனர். இந்தத் தாக்குதலில் சண்முகவேல் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
தாக்குதல் நடந்தபோது, சண்முகவேலுடன் இருந்த காவல் வாகன ஓட்டுநரையும் குற்றவாளிகள் துரத்தியதாகவும், ஆனால் அவர் தப்பி ஓடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், கோவை காவல் நிலையத்தில் எஸ்.ஐ. அறையில் ஒருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தையும் சுட்டிக்காட்டி தனது கண்டனத்தை தெரிவித்தார்.
காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர் என்று சாடினார்.
விசாரிக்க செல்லும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்திலேயே ஒருவர் தூக்கிட்டுக் கொள்ளும் அளவிற்கு அலட்சியமாக இருந்தது என்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது என்று கேள்வி எழுப்பினார்.
ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும் இந்த சீர்கெட்ட சட்டம் ஒழுங்கைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்கான Diversion Tactic மட்டுமே என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ஆனால், மக்கள் தெளிவாக இருப்பதாகவும், அவர்களுக்கு தேவை பாதுகாப்பான தமிழகம் தான் என்றும் கூறினார்.
மேலும் மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க ஒரே வழி கையாலாகாத இந்த விடியாத திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவது தான் என்று இபிஎஸ் சாடியுள்ளார். முறையான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்
இதையும் படிங்க: மீண்டும் ஓபிஎஸை கூட்டணிக்குள் இணைக்க திட்டமா? - சற்றும் யோசிக்காமல் நயினார் நாகேந்திரன் கொடுத்த பதில்...!