தமிழ்நாடு முழுவதும் ஜூலை ஏழாம் தேதி முதல் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறார். இந்த சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து இந்த சுற்றுப்பயணம் தொடங்கியது. ஜூலை 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டம் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, மக்களைச் சந்தித்து, திமுக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவதும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில உரிமைகள், அமைதி, வளர்ச்சி, மற்றும் செழிப்பை மீட்டெடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். இந்த நிலையில், அவரது சுற்றுப்பயணம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது. தற்போது பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மக்களிடையே திமுக அரசு பற்றியும், அதிமுகவின் சாதனைகள் தொடர்பாகவும் விவரித்து வருகிறார். இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி வரும் 24ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்குகிறார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். மக்கள் மத்தியில் உரை நிகழ்த்திய அவர், திமுகவை போல இரட்டை வேடம் கட்சி அதிமுக கிடையாது என கூறினார். பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வெள்ளைக்கொடி பிடிக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார். கேலோ இந்தியா, ஒலிம்பிக் போட்டி, மற்றும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமரை அழைத்தார்கள் என்றும், நாம் கூட்டணியை சேர்ந்தால் எதிர்க்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜெயலலிதாவை கொலை செய்ய பாத்தாங்க..! பரப்புரையில் இபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு..!
இதற்கெல்லாம் காரணம் பயம் என்றும் ஆட்சி பறிபோய்விடும் என்ற அச்சம் இருப்பதாகவும் கூறினார். நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம் அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி இந்திய நாட்டையே ஆளும் உள்துறை அமைச்சரை சந்திப்பதில் என்ன தவறு என்று உதயநிதிக்கு கேள்வியை முன் வைத்தார். சட்டமன்றத்திலேயே கூட்டணி குறித்து என்னிடம் கேள்வி கேட்கும் அளவுக்கு மு க ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டதாகவும், 16 ஆண்டுகால மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தமிழக மக்களை மறந்தவர்கள் தான் திமுகவினர் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: “ஆசை யாரை விட்டது” - ஆட்சியில் பங்கும் கேட்கும் கிருஷ்ணசாமி... அதிமுகவுக்கு அடுத்த அதிர்ச்சி...!