மதுரை தனியார் விடுதியில் புதிய தமிழகம் கட்சித்தலைவரௌ கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மாஞ்சோலை பகுதியில் அங்கு வாழும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மீது மனித உரிமை அத்துமீறல்கள் நடைபெறுகிறது. வாழமுடியாத அளவுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறார்கள். அடிப்படை உரிமைகளைக் கூட தர மறுக்கிறார்கள்.
வனத்தில் தேயிலை பறிப்பதை தவிர வேறு ஏதும் வேலை தெரியாத அவர்களை கீழே இறக்கி வேதனை தருகிறார்கள். ஏன் சொந்த மக்களின் மீது இத்தனை வன்மத்தோடு அரசு நடந்து கொள்கிறது. போக்குவரத்தை நிறுத்தி மின்சாரத்தை தடை செய்து உணவை நிறுத்தி வனத்திற்குள் செல்லக்கூடாது எனும் மிரட்டி அவர்கள் மீது மனித உரிமை அத்துமீறல்களை செய்து வருகிறார்கள்.
நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் போது நீதிமன்றத்தில் பதில் சொல்லாமல் மக்களை துன்புறுத்துவதற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் பல்வேறு போதை உள்ளிட்ட வஸ்துகளால் சீரழிவு ஏற்பட்டுள்ளது. காவல்துறையின் அத்துமீறல்கள் தொடர்கிறது.
இதையும் படிங்க: கூட்டணி ஆட்சி எல்லாம் கிடையாது..! நான் தான் ஆல் ரவுண்டர்.. எடப்பாடி திட்டவட்டம்..!
தமிழகத்தில் நூற்றுக்கு 60% பேர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். மதுப்பழக்கத்தின் தாக்கம் குறித்து பல பேருக்கு தெரியாமல் இருப்பதால் தான் விபரீதங்கள் ஏற்படுகிறது. நுரையீரல் ஈரல் பாதிப்பு இதயத்தையும் மூளையையும் பாதிக்கும் நிலை தற்போது அதிகமாக உள்ளது. மதுவை ஒரு நாள் சாப்பிட்டாலே ஆபத்தை விளைவிக்கும் என அறிக்கை வந்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் கள்ளை உணவென்று ஒரு தவறான கருத்தை மக்கள் மத்தியில் சொல்லி வருகிறார்கள். சட்டவிரோதமாக கள் இறக்கி வருகிறார்கள். கள்ளை இறக்குவது இன்னும் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். கள்ளால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இலக்கியங்களும் திருக்குறளும் மிகத் தெளிவாக எடுத்து கூறி இருக்கிறது.
சிலப்பதிகாரத்தில் கூட கள்குக்கு எதிராக கருத்துக்கள் உள்ளன. குழந்தைக்கும் கள்ளை கொடுக்கலாம் என்கிற ரீதியில் கொண்டு செல்கிறார்கள். இது மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும். கள்ளுக்கு எதிராக 100 இடங்களில் புதிய தமிழர் கட்சி சார்பில் கருத்தரங்கள் நடத்தப்படும்.
ஜூலை 27 ஆம் தேதி திருச்சியில் ஆயிரம் பெண்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. புதிய தமிழகம் கட்சியின் சார்பில் ஏழாவது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த உள்ளோம். தேதி அறிவிக்கப்பட உள்ளது.
எங்களை பொறுத்தவரை பட்டியலீல் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே பிரதான கோரிக்கை. ஆனால் பெயர் மாற்றத்தோடு மத்திய அரசு நிறுத்திக் கொண்டது. பட்டியல் மாற்றத்தை மத்திய அரசு செய்து தரவில்லை.
நாங்கள் வைத்த கோரிக்கை பட்டியல் வெளியேற்றம் என்பது தான். ஆனால் பெயர் மாற்றக் கோரிக்கையோடு பாஜக நிறுத்திக் கொண்டது. எங்களுக்கு உத்தரவாதம் வேண்டும். ஒன்றாக இருந்தும் கூட்டணி இல்லாமல் தனித்து நின்று போட்டியிட்டோம். அதன் காரணமாக எங்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது என்று ஒரே சொல்லலாம்.
தேர்தல் நேரத்தில் பட்டியலில் இருந்து வெளியேற வேண்டும் என அடித்தட்டு மக்களை சுரண்ட கூடிய வகையில் சில அமைப்புகள் தேனியில் மற்றும் சில இடங்களில் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். 2026 ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் புதிய தமிழகம் கட்சி செயல்பட உள்ளது. அதையே இப்போது ஒற்றை நோக்கமாக கொண்டு செயல்பட உள்ளோம் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: காத்துல கூட கரப்ஷன்..! பரபரக்கும் அரசியல் களம்.. பட்டைய கிளப்பும் இபிஎஸ்..!