மூன்றாவது நாளாக சட்டப்பேரவை கூடியது. அப்போது, கிட்னி விவகாரம் மற்றும் ஆளுநருக்கு எதிரான தீர்மானம், நெல் கொள்முதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்ட நிலையில்கடன் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்து பேசினார். அப்போது, தமிழ்நாடு கடனில் தத்தளிப்பதாக கூறுவது தவறு என்றும் அதிமுக ஆட்சியில் வாங்கிய கடனுக்கு நான்கு ஆண்டுகளாக வட்டி கட்டி வருவதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
அதிமுக விட்டுச் சென்ற கடன் ரூ.1.40 லட்சம் கோடிக்கு நான்கு ஆண்டுகளாக வட்டி கட்டி வருவதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் 128 சதவீதம் அளவுக்கு கடன் அதிகரித்ததாகவும், ஆனால் திமுக ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் 93 சதவீதம் தான் கடன் வளர்ச்சி உள்ளதாகவும் கூறி இருந்தார்.

அதிமுக விட்டு சென்ற கடனைப் பற்றி பேசாதது ஏன் என தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பி இருந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்தார். அதிமுகவின் 10 ஆண்டு ஆட்சியையும், திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியையும் ஒப்பிட்டு பேசினார்.
இதையும் படிங்க: கருப்பு பட்டையை கிண்டலடித்த சபாநாயகர்... என்ன SICK MINDSET இது? பந்தாடிய அதிமுக...!
10 ஆண்டில் அ.தி.மு.க அரசு 4 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கிய நிலையில், தி.மு.க அரசு 4 ஆண்டிலேயே 4 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியது என்று குறிப்பிட்டார். சட்டப்பேரவையில் கடன் விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு விமர்சித்து உள்ளார்.
இதையும் படிங்க: கள்ளச்சாராயமும், கரூர் சம்பவமும் ஒன்னா? என்ன பேசுறீங்க இபிஎஸ்... முதல்வர் காரசார வாதம்