ஓ. பன்னீர்செல்வம், அதிமுகவின் முக்கிய தலைவராகவும், தேனி மாவட்டத்தில் செல்வாக்கு மிக்க தலைவராகவும் திகழ்ந்தவர். மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்த இவர், பலமுறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர்.
2017-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், பின்னர் தனித்தனி அணியாகவும் செயல்பட்டார். இருப்பினும், 2022-ல் கட்சியின் பொதுக்குழு மூலம் இபிஎஸ் ஒரே தலைவராக உயர்த்தப்பட்டதால், ஓபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்தப் பின்னணியில், பாஜகவுடனான கூட்டணி மற்றும் அதன் அரசியல் உத்திகளில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. நேற்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தங்களது உறவை முற்றிலுமாக முறித்துக் கொண்டதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கூட்டணி தொடர்பான எந்த அறிவிப்பு குறித்தும் ஓபிஎஸ் தரப்பு வெளிப்படுத்தவில்லை.
இதையும் படிங்க: இபிஎஸ் சொல்வது தான் எங்களுக்கு வேத வாக்கு.. அடித்துக்கூறிய செல்லூர் ராஜு..!

இதனிடையே, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஓபிஎஸ் கூட்டணியை விட்டு சென்றது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அவரைப் பார்ப்பதற்கு பாவமாக இல்லையா என்ற கேள்வியால் செல்லூர் ராஜு கொதித்துப் போனார்.
ஓபிஎஸ் குறித்து தரக்குறைவாக பேசாதீர்கள் என்று செல்லூர் ராஜு காட்டமாக தெரிவித்தார். ஓபிஎஸ் கூட்டணியை விட்டு போனதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ளது என்று கூறிய அவர் எட்டு மாதத்திற்கு முன்னரே அவர் அங்கு சென்றார் இங்கு சென்றார் என்று பேசுவது தவறு என்றும் வார்த்தையை அளந்து பேசுங்கள் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: தேர்தலுக்காக மகளிர் உரிமைத்தொகைக் தளர்வு... திமுக-வை கிழித்து தொங்கவிட்ட செல்லூர் ராஜூ!!