அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் தொண்டைமான் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
அதிமுக மதவாத சக்திகளுக்கு துணை போவதாக கார்த்திக் தொண்டைமான் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
2012-ஆம் ஆண்டு புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ முத்துக்குமரன் விபத்தில் இறந்ததை அடுத்து, அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: காலையிலேயே பரபரப்பு.. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!
அப்போது ஜெயலலிதா, கார்த்திக் தொண்டைமானை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக அறிவித்தார். கார்த்திக் தொண்டைமான் இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாற்றியவர். 2012 முதல் 2016 வரை அவர் எம்எல்ஏவாக பணியாற்றினார், இந்தக் காலகட்டத்தில் புதுக்கோட்டை தொகுதியில் மக்கள் நலப் பணிகளை மேற்கொண்டார்.

இந்த நிலையில் கார்த்திக் தொண்டைமான் தன்னை பூங்காவில் இணைத்துக் கொண்டுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக மதவாத சக்திகளுக்கு துணை போவதாகவும் அது தனக்கு பிடிக்கவில்லை., செயல்பாடுகள் சரியில்லை என்று தெரிவித்தார்.
அதிமுகவின் போக்கு சரி இல்லை என்பதால் திமுகவில் இணைந்து விட்டதாக கார்த்திக் தொண்டைமான் கூறினார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததில் அதிருப்தி அடைந்த அன்வர் ராஜா சமீபத்தில் திமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமானும் விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். அதிமுகவை விமர்சித்து திமுகவில் இணைந்தது, தமிழ்நாடு அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வருடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் திடீர் சந்திப்பு... தமிழக அரசியலில் பரபரப்பு!