தவெக அரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் வேளாண் துறை மற்றும் விவசாயிகள் நலன் சார்ந்த அறிவிப்புகள் என்னனென்னவென பார்க்கலாம்.
நிதி அமைச்சர் மரிய வில்சன் பேசியதாவது: "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்" என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க, விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து, அவர்களின் கடன் சுமையை குறைக்கும் நோக்கில், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பெறப்பட்ட வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டத்தை நமது அரசு அறிவித்தது.
இந்தத் திட்டத்தின் கீழ், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க் கடன் பெற்ற 75,000 விவசாயிகளுக்கு 100 சதவீத பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 35,000 விவசாயிகளுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'எம்.ஜி.ஆர் தொடங்கிய துறை அடையாளத்தை இழக்கிறது'... முதல்வர் விஜய்க்கு அலுவலர்கள் அவசர கோரிக்கை
மொத்தமாக 14.43 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.5,932 கோடி மதிப்பிலான விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இந்தப் பயிர்க் கடன் தள்ளுபடி, தகுதியுள்ள அனைத்து விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இதுமட்டுமல்லாமல், எந்தச் சூழலிலும் விவசாயிகளின் பக்கமே நிற்கும் அரசாக நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படும்.
2026–27ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீட்டில் கூட்டுறவுத் துறைக்கு ரூ .8,028 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பருவநிலை மாற்றத்தின் தாக்கத்தால், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யாத காரணத்தால், மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருப்பு இல்லை. இதன் காரணமாக, வழக்கமாக ஜூன் 12 அன்று பாசனத்திற்காக திறக்கப்படும் மேட்டூர் அணையை திறக்க இயலாத நிலை ஏற்பட்டது.
இந்தச் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நெல் உற்பத்தி குறையாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.134 கோடி நிதி ஒதுக்கீட்டில் குறுவை தொகுப்புத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவு, நேரடி நெல் விதைப்பு, விதை உற்பத்தி மானியம், நெல் விதை வழங்குதல், Liquid Bio Fertilizers, மற்றும் Distribution of Micronutrient Fertilizer Mixtures உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின் மானியத்திற்காக, 2026–27ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீட்டில் ரூ .7,432 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மேலும், 2026–27ஆம் ஆண்டிற்கான திருத்த வரவு–செலவுத் திட்ட மதிப்பீட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறைக்கு மொத்தம் ரூ.14,984 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: குட் நியூஸ்! வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்? அமைச்சர் வினோத் சொன்ன முக்கிய அறிவிப்புகள்!