தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு சின்ன உடல்நலக் குறைவு! நேத்து (ஜூலை 21, 2025) காலையில் சென்னையில் தன்னோட வழக்கமான நடைபயிற்சி பண்ணும்போது லேசான தலைசுற்றல் வந்திருக்கு. உடனே சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இருக்கிற அப்போலோ மருத்துவமனையில் (கிரீம்ஸ் ரோடு) அவரை அனுமதிச்சிருக்காங்க.
இதனால, அவரோட மனைவி துர்காவோட “என் கணவர்” புத்தக வெளியீட்டு விழாவுக்கு கூட அவர் போக முடியல. மருத்துவர்கள், “மூணு நாள் முழு ஓய்வு எடுக்கணும்”னு சொல்லியிருக்காங்க.
அப்போலோ மருத்துவமனையோட மருத்துவ சேவைகள் இயக்குநர் டாக்டர் அனில் பி.ஜி., “முதல்வர் ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் வந்தது, அதனால மருத்துவ பரிசோதனைகளுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கார்”னு ஒரு அறிக்கை வெளியிட்டார். இன்னைக்கு (ஜூலை 22) காலையில் தேனாம்பேட்டை அப்போலோவில் மேலும் சில பரிசோதனைகள் நடந்திருக்கு.
இதையும் படிங்க: முதல்வர் பதவி விலகியே ஆகணும்.. மேடையில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன அருண்ராஜ்..!
“அவரோட நிலைமை நல்லா இருக்கு, ஆனா மூணு நாள் ஓய்வு தேவை. இன்னும் சில டெஸ்டுகள் செய்யப்படும்”னு மருத்துவமனை சொல்லியிருக்கு. துணை முதல்வரும், ஸ்டாலினோட மகனுமான உதயநிதி ஸ்டாலின், “கடந்த ரெண்டு மாசமா முதல்வரோட பிசி ஷெட்யூல் தான் இதுக்கு காரணம். விரைவில் வீட்டுக்கு வருவார்”னு சொல்லி, மக்களை அமைதிப்படுத்தியிருக்கார்.

இந்த செய்தி கேள்விப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் ஸ்டாலினுக்கு தொலைபேசியில் பேசி, “விரைவில் குணமாக வாழ்த்துகிறோம்”னு சொல்லியிருக்காங்க.
X-ல கவிஞர் வைரமுத்து, “ஸ்டாலின் நலமா இருக்கார்னு மருத்துவர்கள் சொன்ன பிறகுதான் மனசு அமைதியானது”னு உருக்கமா பதிவு போட்டிருக்கார். இதே மாதிரி, SDPI தலைவர் நெல்லை முபாரக், “இறைவனை பிரார்த்திக்கிறேன்”னு பதிவு செய்திருக்கார்.
இந்த நிலையில், ஸ்டாலினோட திருப்பூர், கோவை பயணங்கள் எல்லாம் ஒத்திவைக்கப்பட்டிருக்கு. குறிப்பா, பொள்ளாச்சியில் காமராஜர், வி.சுப்பிரமணியம், ஜி.மகாலிங்கம் சிலைகளை திறக்கற விழா, பரம்பிக்குளம்-ஆழியாறு நீர்ப்பாசன திட்ட விழா எல்லாம் இப்போ நடக்காது. ஆனா, ஸ்டாலின், “நான் மருத்துவமனையில் இருந்தாலும், அரசு வேலைகளை தொடர்ந்து பார்க்குறேன்”னு X-ல பதிவு போட்டு, தன்னோட கடமை உணர்வை காட்டியிருக்கார்.
மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளைத் தொடர்கிறேன். உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் திட்டமிட்டபடி நடைபெறுகிறதா, நேற்றுவரையில் பெறப்பட்ட மனுக்கள் எத்தனை - தீர்வுகாணப்பட்டவை எத்தனை உள்ளிட்ட விவரங்களைத் தலைமைச் செயலாளரிடம் கேட்டறிந்து, மக்களின் மனுக்கள் மீது தீர்வு காண்பதில் எந்தவிதமான தொய்வும் ஏற்படக் கூடாது என அறிவுறுத்தியுள்ளேன்னு முதல்வர் ஸ்டாலின் சொல்லி இருக்காரு.
இதுக்கு முன்னாடி, 2023-ல ஒரு முறை வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அப்போலோவில் அனுமதிக்கப்பட்டவர், அடுத்த நாளே டிஸ்சார்ஜ் ஆனது நினைவிருக்கலாம்.
இதையும் படிங்க: கே.எம்.காதர் மொகிதீனுக்கு தகைசால் தமிழர் விருது.. சுதந்திர தினத்தன்று கௌரவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!