தஞ்சையில் நடைபெற்ற மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. துளசிஅய்யா வாண்டையாரின் 5-ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்தில் பங்கேற்ற மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ அவர்கள், அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் புதிய அரசுக்கான அறிவுறுத்தல்களையும், மத்திய அரசுக்கு எதிரான கண்டனங்களையும் பதிவு செய்தார்.

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு குறித்துப் பேசிய வைகோ, முந்தைய அரசின் கொள்கை நிலைப்பாடுகளைப் புதிய அரசும் தொடர வேண்டும் என வலியுறுத்தினார். சமூகநீதி, மதச்சார்பின்மை, ஜனநாயகம், பெண்கள் பாதுகாப்பு மற்றும் தமிழக மக்களின் வாழ்வாதாரங்களைக் காக்கும் கடமைகளில் இம்மி அளவும் பிசகாமல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய் ஆட்சியை நடத்த வேண்டும்.
இதையும் படிங்க: விஜய் குதிரை பேரம் நடத்தல..! நான் நம்புறேன்..! வைகோ ஃபுல் சப்போர்ட்..!
பிஎம் ஸ்ரீ திட்டம் மற்றும் மும்மொழிக் கொள்கையை முந்தைய ஸ்டாலின் அரசு அடியோடு நிராகரித்தது. அதே உறுதியான நிலைப்பாட்டைத்தான் இன்றைய புதிய தவெக அரசும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். தவெக அமைச்சரவையில் அதிமுகவினருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக வெளியாகும் தகவல்கள் யாவும் வெறும் யூகங்கள் மட்டுமே என்று அவர் கடந்து சென்றார்.
நாடு முழுவதும் புயலைக் கிளப்பியுள்ள நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து வைகோ மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடினார். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தொடர் குளறுபடிகளால் ஒட்டுமொத்த மாணவர் சமுதாயமும் மிகப்பெரிய அளவில் மன உளைச்சலுக்கும் பாதிப்பிற்கும் உள்ளாகியிருக்கிறது. தேசிய அளவில் கல்வித்துறையில் நடந்துள்ள இந்த இமாலயத் தவறுக்கு முழுப் பொறுப்பேற்று, ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: வைகோவிடம் வாழ்த்து பெற்ற முதல்வர் விஜய்..! பட்டுத்துண்டு அணிவித்து வரவேற்ற எம்பி துரை வைகோ..!