தமிழகத்தில், பாலியல் பலாத்காரம், பாலியல் பலாத்கார முயற்சி, மானபங்கம், பாலியல் துன்புறுத்தல், பெண்கள் கடத்தல், கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் கொடுமைக்கு ஆளாகுதல், வரதட்சணை மரணம் போன்றவற்றை, பெண்களுக்கு எதிரான குற்றங்களாக காவல் துறையினர் வகைப்படுத்தி உள்ளனர்.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு, போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.மாணவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் அளித்த ஆசிரியர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தற்போது சுவாமிமலை அருகே சுந்தரபெருமாள் கோவில் என்ற இடத்தில் 13 வயதுடைய எட்டாம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த பாபநாசத்தில் உள்ள தனியார் பள்ளியின் முன்னாள் ஆசிரியர் பாலசுப்பிரமணியன் 29 போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சூறாவளி புயலால் சிதைந்த கியூபா,ஜமைக்கா!! ஆதரவுடன் உதவிக்கரம் நீட்டும் இந்தியா!!
பாபநாசத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி சில மாதங்களுக்கு முன் அப்பள்ளியில் ஆசிரியர் பணியில் இருந்து பாலசுப்பிரமணியன் (29) வெளியேறினார். தற்போது இவர் வீணை பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ,
முன்பு இவர் வேலை பார்த்த பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவனிடம் பாலசுப்பிரமணியன் தவறாக நடக்க முயன்றதாகவும், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவன் தனது பெற்றோர்களிடம் இது குறித்து தெரிவித்துள்ளான் .
இதனை தொடர்ந்து மாணவனின் தந்தை பாண்டியன் சுவாமிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து முன்னாள் ஆசிரியர் பாலசுப்ரமணியனிடம் சுவாமிமலை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து பாலசுப்பிரமணியன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: #BREAKING பிங்க் ஆட்டோ... தமிழக அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு